Best Phones Under Rs 15000: 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கும், ஸ்மார்ட் ஃபோன்களின் விவரங்களை அறியலாம்.
ஸ்மார்ட் ஃபோன்கள்:
கீ பேட் ஃபோனிலிருந்து ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டிற்கு மாறுவது என்பதே, இந்த 15 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட செக்மெண்டில் இருந்து தான் தொடங்குகிறது. விற்பனையிலும் இந்த பிரிவு தான் அதிகப்படியாக கல்லா கட்டி வருகிறது. ஏராளமான மாடல் செல்ஃபோன்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. இந்நிலையில், 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்கக் கூடிய தரமான ஸ்மார்ட் ஃபோன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
SAMSUNG GALAXY F23:
15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிலேயே அதிக விலையில் விற்பனை செய்யப்படுவது, சாம்சங் கேலக்ஸி F23 மாடல் தான். இதன் விலை 14 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். இதில் 6.6-இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா, அத்துடன் ஒரு பெரிய 5,000mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்லன. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 4ஜிபி+128ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Realme 11x:
15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் தரமான ஃபோன்களில் Realme 11x மாடல் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் விலை 13 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். மீடியா டெக் டைமன்சிட்டி 6100+ சிப் மற்றும் பிரகாசமான 6.72-இன்ச் FHD+ டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. 64-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன், ஒரு பெரிய 5,000mAh பேட்டரியை பெற்று வருகிறது.
Redmi 12 5G:
15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் Redmi 12 5G கொண்டுள்ள நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த புதிய புராசசர், வாடிக்கையாளர்களிடயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 புராசசர் கொண்ட இந்தியாவின் முதல் தொலைபேசி இதுவாகும். 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய பெரிய 6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளே, குறைந்தபட்சம் 128 GB ஸ்டோரேஜ் மற்றும் பெரிய 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 50-மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. ரெட்மி 12 5G-யின் விலை ரூ.11,999 ஆகும். இதன் 8 GB/ 256 GB வேரியண்டயும் ரூ.15,000க்கு கீழ் பெறலாம்.
Poco X5:
Poco X5 இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 18,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அது 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ.13,999 ஆகும். 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 புராசசரை கொண்டுள்ளது. இது ரேம் மற்றும் ஸ்டோரேஜ்களில் 6ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+256ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. பின்புறத்தில் 48 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் மிகவும் பயனுள்ள 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கொண்ட டிரிபிள் கேமரா உடன் 5,000mAh பேட்டரி ஆகியவற்ற கொண்டுள்ளது.
Moto G54:
இந்த பிரிவில் சிறந்த அம்சங்களை கொண்ட ஃபோனை தேடுகிறீர்கள் என்றால், Moto G54 உங்களுக்கான முக்கிய சாய்ஸ் ஆக இருக்கலாம். இது 6.5-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன், மீடியா டெக் டைமன்சிட்டி 7020 சிப் புராசசரை கொண்டுள்ளது. OIS உடன் கூடிய சிறந்த 50 மெகாபிக்சல் பிரதான கேமராவையும், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. 6,000mAh பேட்டரியை பெற்றுள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 13,999 ஆகும்.