நாம் அனைவருமே ஸ்மார்ட் போன் தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். காலத்திற்கு ஏற்ப எந்த விதமான ஸ்மார்ட் ஃபோன் வாங்கினாலும், அதில் ஒரு பிரச்சனை ஆரம்ப முதலே இருக்கும். அதுதான் மொபைல் வெப்ப பிரச்சனை. இது ஆண்டிராய்டு மொபைல் பயனர்களுக்கும் இருக்கும், iOS பயனர்களுக்கும் இருக்கும். சில ஸ்மார்ட் ஃபோன்கள் சில மணி நேரம் பயன்படுத்தி விட்டு தொட்டுப் பார்த்தலே சூடாக இருக்கும். அது மட்டுமின்றி நீண்ட நேரம் சார்ஜ் செய்துவிட்டு, மொபைலைக் கையில் எடுத்தாலும் மிக சூடாக இருக்கும்.
ஸ்மார்ட் ஃபோன்கள் வெப்பத்தை தாங்கும் வகையில்தான் வடிவமைக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் அது சூடாகத்தான் செய்கிறது. இந்த பிரச்சனையை குறைக்கும் சில வழிமுறைகள் உள்ளன.
- மொபைலை எப்போதுமே சார்ஜில்தான் வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை சராசரியாக 80 முதல் 90 சதவீதம் சார்ஜ் இருந்தாலே போதும். சார்ஜ் முழுவதும் ஆன பிறகும் கூட சார்ஜிலேயே போனை விட்டுவிடுவது. மேலும் இரவு முழுவதும் சார்ஜ் செய்வது இயல்பாகிவிட்டது. இதனாலும் மொபைல் சூடாக இருக்கலாம்.
- நீண்ட நேரம் கேம் விளையாடும் போதும், இண்டெர்நெட் பயன்படுத்தும்போது மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள். கவரை தேர்வு செய்யும்பொழுது, ரப்பர் அல்லது கண்ணாடி உள்ளா கவரையே தேர்ந்தெடுங்கள். பிளாஸ்டிக் மற்றும் பாலிகார்பனேட் கவர்கள் தவிர்ப்பது நல்லது.
- அதிக நேரம் மொபைல் டேட்டா மூலம் டவுன்லோடு செய்வதால் ஸ்மார்ட் ஃபோன் சூடாகும். எனவே சிறிய டைவெளி விட்டு வைஃபை மூல டவுன்லோடு செய்யுங்கள்.
- ப்ளூடூத், மொபைல் டேட்டா ஆகியவற்றை உபயோகிக்காத சமயங்களில் அணைத்து வைக்க வேண்டும். பெரும்பாலான பயனர்கள் சில செயலிகளை பயன்படுத்தும் போது இயல்பாகவே ஆன் ஆகி விடும். அதை அப்படியே விட்டுவிடாமல் அணிப்பது சிறந்தது.
- போன் சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போது மொபைலை பயன்படுத்துவதால் மிக அதிகமான சூடு ஏற்படும். டிஸ்ப்ளே brightness -ஐ முடிந்தளவு குறைத்தாலே அடிக்கடி போனை சார்ஜ் செய்ய அவசியமிருக்காது.
- மொபைல்ஃபோனின் பேட்டரியை மாற்றும்போது, போலியான பேட்டரிகளை வாங்குவது ஆபத்தில் முடியலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும். சில நேரங்களில் அதிக வெப்பத்தினால் வெடிக்கும்.
பாடல்கள் கேட்டுக்கொண்டே கேம்ஸ் விளையாடுவது, ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்குவது போன்றவற்றால் ஸ்மார்ட் ஃபோனின் ஹேங்கிங் பிரச்சனை ஏற்படும். இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கும். - எனவே 2 ஜி.பிக்கும் குறைவான ரேம் கொண்ட போன்களில் பல செயலிகளை வைத்திருக்காமல் குறைப்பது நல்லது. சில நேரங்களில் என்னெற்ற செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கவேண்டிய அவசியம் ஏற்படும். எனவே அதனைத் தவிர்த்துக் கொள்ளவும்.
- தேவையற்ற செயலிகளை தவிர்ப்பது மிக நல்லது. இதனால் அதிகம் பேட்டரி வீணாகும். மேலும் ஃபோனின் வெப்பமும் அதிகமாகும். குறைந்த ஜி.பி கொண்ட மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கலாம்.