Bigg Boss 5 Tamil: கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. 5-வது சீசனின் கடைசி எலிமினேஷனில், தாமரை செல்வி எலிமினேட் ஆனார். இதனால், ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். 


நாளை இந்த சீசனின் கடைசி நாள் என்பதால், பிரம்மாண்டமான முறையில் இறுதி நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 4 சீசன்களை முழுதாக நிறைவு செய்திருக்கிறது. 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, கொரோனா காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் நடுவில் நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. எப்போதும் இறுதிப்போட்டியின் கடைசி நாளன்று நிகழ்ச்சியில் பங்கேற்ற முந்தைய சீசன் வெற்றியாளர்கள், போட்டியாளர்கள், சிறப்பு விருந்துனர்களை அழைப்பது வழக்கம். இந்த முறையும், கடந்த சீசன் போட்டியாளர்களின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.



அந்த வரிசையில், சீசன் 4-ன் வெற்றியாளராக நடிகர் ஆரி அர்ஜூனனுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடந்த சீசன் நடந்து கொண்டிருந்தபோதே ஆரிதான் வெற்றியாளர் என ரசிகர்கள் தீர்க்கமாக நம்பினார்கள். அவரும் வெற்றிவாகை சூடினார். இந்நிலையில், சீசன் 5 இறுதிப்போட்டியில் பங்கேற்க தனக்கு அழைப்பு வரவில்லை என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ஆரி.


இது குறித்து அவர் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், “பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதிப்போட்டியில் அடுத்த வெற்றியாளருக்கு கோப்பையை தரும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன் என நீங்கள் அனைவரும் எதிர்ப்பார்த்திருப்பதை நான் அறிவேன். உங்களையும், கமல் சாரையும் மீண்டும் சந்திப்பதில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான அழைப்பு எனக்கு வரவில்லை” என பதிவிட்டு கமல்ஹாசனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையும், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் சேனலின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்திருக்கிறார் ஆரி.






ஆரி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனில், ஆரியிடம் இருக்கும் கோப்பையை அடுத்த வெற்றியாளருக்கு எப்படி வழங்குவார்கள் என்பது தெரியவில்லை. மேலும், கொரோனா பரவல் காரணமாக, தீவிர பரிசோதனை, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி நடத்த வேண்டி உள்ளதால் அதிக விருந்தினர்களை அழைக்காமல் இறுதிப்போட்டியை நடத்தி முடிக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


நேரலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு காண:



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்