மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. புகழும், சிறப்புக்கும் உரிய இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் இந்த ஆண்டு 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் கண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பாரம்பரிய வழக்கப்படி முதலாவதாக காளையாக பாலமேடு கோயில் காளை அவிழ்க்கப்பட்டது.
கொரோனாவை காரணம் காட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியைஅமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டிகள் நடத்தப்பட்டன.. இதில், வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கி காட்டினர்..
மாலைவரை நடக்கும் இந்த போட்டியின் ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் வெவ்வேறு கலர் யூனிபார்ம் அணிந்து வந்து விளையாடி வருகிறார்கள். இதுவரை 545 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் ராமச்சந்திரன் என்பவரும், தமிழரசன் என்பவரும் ஆள் மாறாட்டம் செய்தது அம்பலமானது. அதாவது, 17 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்த ராமச்சந்திரன் கார்த்தி என்பவரின் பனியனை போட்டுக்கொண்டு மாடு பிடித்தார்.
அதேபோல், 6 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழரசன் என்பவர் சக்கரவர்த்தி என்பவருக்கு பதிலாக மாடு பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர்.
முன்னதாக, உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று பரபரப்பாக நிறைவு பெற்று, இதுவரை இல்லாத அளவிற்கு முதல் பரிசாக கார் , பைக் உள்ளிட்டவை எல்லாம் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்