ஃபேஸ்புக் நிறுவனம் மேட்டாவாக வந்த பிறகு பல புதிய வசதிகளை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக் மெசெஞ்சரில் இந்த புதிய வசதி வந்துள்ளது. குறிப்பாக ஃபேஸ்புக் பே மூலம் கட்டணம் செலுத்தும் போது இந்த புதிய வசதியை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. 


இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு வலைதளபதிவு போடப்பட்டுள்ளது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனத்தின் பேமெண்ட் விருப்பத்தை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் தங்களுடைய கட்டணத்தை நண்பர்களிடன் ஷேர் செய்ய முடியும். இதற்கு ஸ்பிலிட் பேமெண்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதற்காக ஃபேஸ்புக் மெசெஞ்சரில் இந்த புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்த முதலில் மெசெஞ்ரில் ஒரு குரூப் சேட் உருவாக்க வேண்டும். 


அதன்பின்னர் உங்களுடைய கட்டணத்தை எந்தெந்த நண்பர்களுடன் ஷேர் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு உரிய கட்டணத்தை சரியாக மெசெஞ்சர் பிரித்து காட்டும். அந்த தொகையை நாம் மாற்றம் செய்யவும் முடியும். அவ்வாறு மாற்றி இறுதி செய்த பிறகு அந்தந்த நபர்களுக்கு இது செல்லும். அவர்கள் கட்டணத்தை செலுத்திய பிறகு உங்களுடைய பில் தொகை முழுவதும் செலுத்தப்படும். 




இந்த வசதி தற்போது பீட்டா வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் இருக்கும் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அங்கு வீடு மற்றும் பொருட்களை ஷேர் செய்து கொண்டு வசிப்பவர்களுக்கு இந்த ஸ்பிலிட் பேமெண்ட்ஸ்  வசதியை எளிதாக பயன்படுத்த முடியும். 


மேலும் இந்த புதிய அப்டேட் உடன் ஃபேஸ்புக் மெசெஞ்சரில் புதிய எமோஜிக்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஃபேஸ்புக் வசதியே இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆகவே அந்த முறை வந்த பிறகு இந்தப் புதிய வசதியும் இந்தியாவில் வரும் என்று கூறப்படுகிறது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: இது என்ன கடலா? இல்ல இன்டெர்ஸ்டெல்லார் ரீமேக்கா? நாசா வெளியிட்ட வைரல் வீடியோ !