அண்ணா பல்கலைகழக தொலைதூரக் கல்வி மையம் சார்பில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி.,(கணினி அறிவியல்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. எம்.பி.ஏ., படிப்பில் நடப்பாண்டில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ‛டான்செட்’ அல்லது தொலைதூரக் கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://cde.annauniv.edu என்ற இணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.




 ஏப்.15ம் தேதிக்குள் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்பிற்கும், ஏப்.21க்குள் எம்.எஸ்.சி., கம்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் . எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஏப்.18ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கலந்தாய்வு ஏப்.24ல் நடைபெறும் என்றும் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில்  கல்வி மையங்கள் செயல்படும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.