மேஷம்:
பரிசு, பாராட்டு, புகழ் கிடைக்கும். பெருமை கூடும். நல்ல காரியத்தில் ஈடுபடுவீர்கள். சமுதாயத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம். உற்றார் உறவினர் உதவிகரமாக இருப்பர். சிறு.குறு தொழில் செய்வோர் கூடுதல் லாபம் அடையும் நாளாக இன்றைய நாள் அமையும்.



ரிஷபம்:
தன வரவு கூடும், லாபம் கூடும். ஆனாலும் சேமிப்பு முக்கியம். யாருக்கும் பொறுப்பேற்க வேண்டாம். விருந்து விழாக்களுக்கு  செல்லும் வாய்ப்பு கிடைக்கும். விருதுகள் கிடைக்கலாம். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. எங்கு சென்றாலும் பர்ஸ் மீது கவனம் தேவை. தங்கம் வெள்ளி வியாபாரிகளுக்கு இன்றைய நாளில்  விழுப்புணர்வு அதிகம் தேவை.


மிதுனம்:
தேர்ச்சி சிறப்பாக இருக்கும். வருவாய் எதிர்பார்த்த அளவு உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்ற கடும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஜீவசமாதி, கோவில் போன்ற தலங்களுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. குடும்ப உறவுகள் இன்று சாத்தியமான அனுகூலத்தை தருவார்கள். சுபச் செலவு உண்டு. வரன் உள்ளிட்டவை அமையும் நாள் இன்று.


கடகம்நு
இன்றைய நாள் செலவு அதிகரிக்கும். அலைச்சலும், ஆதாயமும் கூடும். பொருள் வரவில் கவனம் தேவை. செல்லப் பிராணிகளிடம் அதிக கவனம் தேவை.  உடல் நிலையில் கவனம் செலுத்தவும்.  உறவினர்கள் உதவுவார்கள்; வழக்குகள் சாதகமாகும். 


சிம்மம்:
ஓய்வு தக்க சமயத்தில் கிடைக்கும். தூக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தவும். சுவரில் தான் சித்திரம் என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனம் தேவை. காரியம் வெற்றி பெற பொறுமை அவசியம். ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து எதையும் செயல்படுத்தவும். மகான்களின் ஆசியும், அறிமுகமு் கிடைக்கும்.


கன்னி:
கோபத்தை முற்றிலும் தவிருங்கள். பொறுமை மிக அவசியம். அனைவரையும் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிட வேண்டாம். முடிந்த அளவு  தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது இன்றைய நாளில் பலன் தரலாம்.


துலாம்:
அடுத்தவரை நம்பி வேலையை ஒப்படைக்க வேண்டாம். ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஏமாற, ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும் நாள் என்பதால், கவனத்தை அதன் திசையிலேயே செயல்படுத்தவும். 


விருச்சிகம்:
மறதி, சோம்பலை தள்ளி வையுங்கள். கோபம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம் . காய், கனி வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.  புதிய வாகன யோகம் சிலருக்கு உண்டு. வழக்கமான புத்துணர்ச்சியுடன் செயல்படவும்.


தனுசு:
ஆதரவு, பொருளாதாரம் கூடும் நாள். தன வரவு சாத்தியமாகும். எதிர்கால சிந்தனை அவசியம். பழையதை சிந்தித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.  சேமிப்பு அவசியத்தை உணர வேண்டிய நாள். எழுத்து தொடர்பான பணியில் இருப்போர் வளம் பெறுவர். 


மகரம்:
ஆன்மீக நாட்டம் கூடும். தூர  தேச பயணம் பலன் தரும். மாணவர்கள் வெளிமாநில, வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.  நலன் தரும் நாளாக இருக்கும்


கும்பம்:
பயம், படபடப்பு, சலனம் தோன்றும் நாள். மனதை திடமாக வைத்துக் கொள்ளவும்.  அலுவலக சூழலை மகிழ்வாக வைத்து கொள்ளுங்கள். அப்போது தான் உடல்நிலை  சீராக இருக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் குறையும். 



மீன ராசி
உயர்வான சிந்தனை ஏற்படும் நாள். அரசியல் ஆர்வம் கூடும். அனுகூலம் கூடும். கூட்டாளிகளால் சாதிக்கலாம். மாணவ செல்வங்களுக்கு சாதகமாக சூழல் ஏற்படும். விவசாயிகளுக்கு பசு உள்ளிட்டவற்றால் தனலாபம் கிடைக்கும் நாள் இன்று.



கணித்தவர்: ஜோதிட புகழ் மடப்புரம் கரு.கருப்பையா