தொழில்நுட்பம் வளர்ந்த நாள் முதல் மனிதர்களுக்கு எந்த அளவிற்கு பயன் அளித்து வருகிறதோ அதே அளவிற்கு அந்த தொழில்நுட்பம் சார்ந்து பல பிரச்னைகளும் பின் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நமக்கு முன்பின் பழக்கம் இல்லாத நபர்கள் நண்பர்களாக பழகி அல்லது வேறு வழியில் மோசடி வேலைகளிலும் சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக நாள்தோறும் சமூக வலைதளங்கள் மோசடி குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.




இந்நிலையில் பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவது வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறும் பாதுகாப்பு வழிமுறைகள்: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது வித்தியாசம் இன்றி முகநூலை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். நமது வீட்டுக்குள் உறவினர்கள், நண்பர்களைத் தவிர வெளிநபரை அனுமதிக்காதததைப் போல, பேஸ்புக்கிலும் கடைப்பிடிக்க வேண்டும்.




 நமது பேஸ்புக்கில் யாரை அனுமதிக்கலாம் என்பதை நாம் முடிவு செய்யலாம். வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டு செல்வதைப் போல, பேஸ்புக்கிலும் சேப்டி, செக்ரியூட்டியை எனபில் செய்து பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். பேஸ்புக்கில் நண்பர்களோ அல்லது நண்பர்களின் நண்பர்கள் மட்டுமே இணையும் வகையில் பேஸ்புக் செட்டிங்ஸ்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும். பேஸ்புக்கில் நமது அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியை யாரும் பார்க்காத வகையில் மாற்றி அமைக்க வேண்டும். நாம் பேஸ்புக்கில் இருப்பதை கூகுள், யாகூ போன்ற ஆப்ஸ் மூலம் யாரும் பார்க்க முடியாத வகையில் செட்டிங்ஸ்ஸை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும். 




இவ்வாறு செய்வதன்மூலம் உங்களது பேஸ்புக்கை உங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டுமே பார்க்க இயலும். மேலும், சேப்டி பாராமீட்டர் என்ற இடத்தில், பேஸ்புக், மெசஞ்சர், ஈ-மெயில் என்றிருக்கும் மூன்றையும் செலக்ட் செய்தன்மூலம் உங்களது பாஸ்வேர்டை வெறொருவர் திருட்டுத்தனமாக உள்நுழைய முயற்சிக்கும் போது, நீங்கள் அதனை சுலபமாக கண்டறிய முடியும். மேலும், உங்களது பாஸ்வேர்டை யாரும் சுலபத்தில் யூகிக்க முடியாததாக அமைத்துக் கொள்ளுங்கள். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


பேஸ்புக்கை பயன்படுத்தும் அனைவரும் மேற்கூறியவற்றை செய்து பேஸ்புக்கை பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


 


வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு!