தமிழ்நாட்டில் கடைசியாக முப்பத்தி எட்டாவது மாவட்டமாக பிடிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளராக பவுன்ராஜ் என்பவர் இருந்து வருகிறார். இவர் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 2 முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அண்மையின் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் பவுன்ராஜ் போட்டியிட்டு தன்னை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் நிவேதா முருகனிடம் தோல்வி அடைந்தார். 




இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது   பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எடக்குடி கிராமத்தில் வாக்களர்களுக்கு ஓட்டுக்காக பணம்கொடுப்பதற்காக எடக்குடி அதிமுக ஊராட்சி தலைவர் தங்கமணி (56) என்பவரிடம் பவுன்ராஜ் பணம் கொடுத்ததாகவும், தங்கமணி சட்டவிதிமுறைகளை மீறி பணம்கொடுக்க முடியாது என்று தெரிவித்ததால் பிரச்சனை ஏற்பட்டது அதிமுகவில் இருந்து விலகி தங்கமணி திமுகவில் இணைந்துள்ளார். 




அதனைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளராக இருந்த பவுன்ராஜ்  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கொலை மிரட்டல்  விடுத்ததாக தங்கமணி பெரம்பூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட பெரம்பூர் காவல் நிலைய காவலர்கள்  எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தேர்தல் முடிந்தபிறகு ஏப்ரல் 23 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கமணி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கீழமைநீதிமன்றத்தை அனுகி தீர்வுபெற்றுக்கொள்ள அறிவுருத்தப்பட்டது. 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


அதனையடுத்து தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கமணி மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அப்துல்கனி, தங்கமணி தொடர்ந்த வழக்கில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக இருந்த பவுன்ராஜ் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 506(2)ன் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. அதனையடுத்து பெரம்பூர் காவல்துறையினர் இன்று முன்னாள் பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.