பேஸ்புக் நிறுவனத்தின் உரிமை நிறுவனமான மெடா தரப்பில் புதிதாக டிஜிட்டல் ஆடை ஸ்டோர் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அதில் பயனாளர்கள் தங்கள் அவதார்களுக்கான டிசைனர் உடைகளை வாங்கிக் கொள்ளலாம் எனவும் மெடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 


பலென்சியாகா, ப்ராடா, தாம் ப்ரவுன் முதலான பேஷன் பிரண்ட்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு விர்ச்சுவம் உடைகள் விற்பனைக்கு விரைவில் வெளியிடப்படும் என மார்க் சக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம் தளத்தின் பேஷன் பிரிவின் தலைவர் வெளியிட்டுள்ள லைவ் வீடியோவில் கூறியுள்ளார். 


இதுகுறித்து பேசியுள்ள மெடா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இந்த உடைகளின் விலை சுமார் 2.99 முதல் 8.99 அமெரிக்க டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 230 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை இருக்கவுள்ளது. இது இந்த உடையை வடிவமைக்கும் நிறுவனங்களின் உண்மையான உடைகளை விட பல மடங்கு குறைவானது. உதாரணமாக ப்ராடா நிறுவனத்தின் மேட்டினி ஆஸ்ட்ரிச் பேக் சுமார் 10,700 அமெரிக்க டாலர் விலை கொண்டது. இதன் இந்திய மதிப்பு சுமார் 8.3 லட்சம் ரூபாய் ஆகும். 



மேலும், இதுபோன்ற முயற்சிகளின் மூலம் பல்வேறு டெவலப்பர்கள் இணைந்து வெவ்வேறு விதமான டிஜிட்டல் உடைகளை உருவாக்க முடியும் எனவும், அவற்றை விற்பனை செய்ய திறந்தவெளி சந்தையாக இந்த ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம் பயன்படும் எனவும் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 


பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முதலான மெடா தளத்தின் சேவைகளைப் பயன்படுத்தும் போது அவதார்கள் மூலமாகவே பயனாளர்கள் இணைந்துகொள்ள முடியும். எனவே டிஜிட்டல் உலகின் அவதார்கள் மூலம் ஒன்றிணையும் சாத்தியத்தில் அனைவருக்குமான இடமாக அது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. 


மெடா நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களைப் பயன்படுத்துவோர் பலரும் வீடியோ கேம்ஸ் விளையாட, உடற்பயிற்சி வகுப்புகளில் பயில, குழுவாக பேசுவதற்கு முதலான வேலைகளுக்காக அவதார்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும், இந்த டிஜிட்டல் உடைகள் முதல்கட்டமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முதலான செயலிகளுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு, மெடா நிறுவனம் விர்ச்சுவல் ரியாலிட்டி அவதார்களின் வடிவமைப்பை சற்றே உணர்ச்சி கொண்டதாகவும், 3டி வடிவத்திலும் மாற்றியதோடு, கடந்த ஜனவர் மாதம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முதலான செயலிகளில் அவற்றைப் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண