இந்தியாவில் விற்கப்படும் பிரபலமான லேப்டாப்களில் ஹூவாய் லேப்டாப் மாடல்களும் ஒன்று. பல லேப்டாப் நிறுவனங்கள் பல வாடிக்கையாளர்களை ஈர்க்க பல வகையான புதிய அம்சங்களை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய  மேட்பூக் இ லேப்டாப் என்ற புதிய வகையான ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 


இந்த புதிய லேப்டாப்பில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


ஹூவாய் மேட்பூக் இ லேப்டாப் 2 இன் 1 லேப்டாப் ஆக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விண்டோஸ் 11 ஒஎஸ் உள்ளது. இதை ஒரு விண்டோஸ் டேப்லட் கம் லேப்டாப் ஆக பயன்படுத்தி கொள்ள முடியும் என்று ஹூவாய் தெரிவித்துள்ளது. 


இந்த லேப்டாப் கம் டேப்லட்டில் கோர் ஐ-5 பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. 16 ஜீபி ரேம் மற்றும் 512 ஜீபி ஸ்டோரேஜ் ஆகியவை இருக்கிறது. மேலும் இதில் 12.6 இன்ச் ஒ.எல்.இ.டி ஸ்கிரீன் மற்றும் 2560*1600 பிக்சல் ரிசோலியூசன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் எடை 1.15 கிலோவாக உள்ளது. இதில் இருக்கும் யுஎஸ்பி போர்ட் -சி தண்டர் போல்ட் தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 




இந்த லேப்டாப்பில் வைஃபை-6 மற்றும் ப்ளூடூத் வசதி ஆகியவை உள்ளது. எனினும் டேப்லட்டாக பயன்படுத்தும் போது 5ஜி மற்றும் மொபைல் இணையதள சேவையை உபயோகம் செய்ய முடியாது. இந்த மேட்பூக்கில் 13 எம்பி சென்சார் வசதி கொண்ட வேப் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த லேப்டாப்பில் கிபோர்ட் வசதி தவிர எம்-பென்சில் வசதியும் உள்ளது. அந்த எம் பென்சில் வைத்து டச் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். 


இந்த லேப்டாபின் பேட்டரி பெர்ஃபாமென்ஸ் சற்று குறைவாக உள்ளது. இதன்காரணமாக அடிக்கடி பவர் இன்பூட்டில் நாம் சார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளதாக தெரிகிறது. மேலும் பவர் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி ஆகிய இரண்டிற்கும் ஒரே போர்ட் வழங்கப்பட்டுள்ளதால் இது சற்று சிக்கிலாக அமைந்துள்ளது.  இந்த லேப்டாப்பில் உள்ள ஸ்பீக்கர்கள் நன்றாக உள்ளதாக தெரிகிறது. ஆகவே இதில் 4கே ரிசோலியூஷனில் வீடியோ பார்க்கும் போது அது நன்றாக அமைந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர். 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண