பிரபல ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தின் தனது முதல் நிகழ்ச்சியை வரும் மார்ச் 8 ஆம் தேதி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற  ஐ போன் எஸ் இ 3, நியூ ஐ பேடு ஏர், உள்ளிட்டவற்றுடன் சில வகையான மேக் கம்யூட்டர்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு போல இந்தாண்டும் ஆப்பிள் நிகழ்ச்சி ஆன்லைனிலேயே நடக்க இருக்கிறது.

  





ஐ போன் எஸ் 3


ஆப்பிள் நிறுவனம் முதன்முறையாக ஐ போன் எஸ் இ மாடல் போன்களை கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் போன்கள் புதுபிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்போது மூன்றாவது மாடலாக ஐ போன் எஸ் 3 மாடல் போன்கள் வெளியாக இருக்கிறது. இந்தியா டுடே வெளியிட்ட தகவலின் படி, இந்த போனில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என சொல்லியிருக்கிறது. 


போனின் டாப்பில் அதிகளவு பெசல் ஏரியா இருக்கும் வகையில் வரும் இந்த போனில், வழக்கமாக இடம்பெறும் ஐ போன் ஐகானிக் டச் ஐடியும் இடம்பெற்றிருக்கிறது. A15 பயோனிக் சிப்செட்டை உள்ளடக்கியிருக்கும் இந்த போனில் நீண்ட நேரம் செயலாற்றும் பேட்டரியும், 5ஜி நெட்வொர்க் வசதியும் இடம்பெற்றுள்ளதாம். 


ஐ பேடு ஏர்.
 
இந்த ஐ பேடு ஏர், 15 பயோனிக் சிப்செட்டுடன், 5G நெட்வொர்க் வசதியையும் உள்ளடக்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ பேடு ஏரில், ஐ போன் மினியில் இடம்பெற்ற அதே அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறதாம். அதன் படி பார்த்தால், 12 எம். பி ஃப்ரண்ட் கேமாரா,  Quad-LED ட்ரூ டோன் ப்ளாஷ் ஆகியவை  இந்த பேடில் இடம்பெறும். 


மேக் மினி:


இந்த மேக் மினி, மேக் மினி ப்ரோ என்று அழைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதில் மேக்புக் ப்ரோவில் பொருத்தப்பட்டிருக்கும் எம் 1 ப்ரோ சிப்செட்டை விட, அதிக பவர் கொண்ட சிப்செட் பொருத்தப்பட உள்ளதாம். 


மேக்புக் ப்ரோ எம் 2:   


மேக்புக் ப்ரோ எம் 2  வின் டிசைன் கடந்த வருடம்தான் புதுப்பிக்கப்பட்டதால், இந்த மேக்புக் ப்ரோ டிசைனும் அதே போல  இருக்கும் என சொல்லப்படுகிறது. இதில் எம் 2 சிப்செட்டை விட பவர் ஃபுல்லான சிப்செட் பொருத்தப்பட உள்ளதாம்.  Mini LED டிஸ்ப்ளே இதில் இடம்பெறவில்லை.