பிரபல Asus நிறுவனம் Zenbook Pro 14 Duo OLED என்னும் சூப்பர் மாடல் லேப்டாப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.  Zenbook Pro 14 Duo OLED  என்பது இரண்டு திரைகளை கொண்ட புதுமையான லேப்டாப். இதன் மூலம் ஒரே நேரத்தில் லேப்டாப்பில் வேலை செய்யவும் , கேம்ஸ் விளையாடவும் முடியும். இந்த லேப்டாப்பில் இருக்கும் சிறந்த வசதிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.




சிறப்பம்சங்கள் :


 Zenbook Pro 14 Duo OLED இன் முதன்மை திரையானது 14.5 இன்ச் OLED டிஸ்ப்ளே ஆகும், இது உங்களுக்கு 2.8K தெளிவுத்திறனை வழங்குகிறது. நீங்கள் ஒரு 120Hz புதுப்பிப்பு வீதத் திரையைப் பெறுவீர்கள், மேலும் அதிவேக தொடுதிரை வசதியுடன் வந்துள்ளது. இரண்டாவது திரையானது , கீபோர்டுக்கு அருகில் உள்ளது. இதனை உயர்த்தும் வகையில் அட்ஜெஸெஸ்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரையானது 12.7-இன்ச் அளவுள்ள ஐபிஎஸ் பேனலைப் பெறுகிறது மற்றும் இந்த ஆண்டு மாடல் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.கேமிங், லைட் வீடியோ எடிட்டிங் மற்றும் 20-25 டேப்களுடன் Chrome திறக்கப்பட்டிருந்தாலும், செயல்திறன் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இயங்குகிறது.ஜென்புக் ப்ரோ 14 டியோ ஓஎல்இடி 2 கிலோவிற்கும் குறைவான எடையைக் கொண்டுள்ளது இந்த சீரிஸ் லேப்டாப்ஸில் இதுதான் குறைவான எடைக்கொண்ட லேப்டாப் என்றால் மிகையில்லை.Zenbook Pro 14 Duo OLED போர்டில் உள்ள ஸ்பீக்கர்களின் ஆடியோ , தரத்திற்கான மற்றொரு சிறப்பம்சம்.




பிரச்சனைகள் :


 Zenbook Pro 14 Duo OLED ஆனது அடிக்கடி ஹீட் ஆவதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றன. ஆபத்து ஏற்படும் வகையில் அல்ல.எப்போதும் உங்களை சுற்றி சார்ஜரை வைத்திருக்க வேண்டியது அவசியம். என்னதான் இந்த மாடல் அதிக நேரம் பேட்டரியை தாங்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என கூறினாலும் கூட , அடிக்கடி பேட்டரி போடும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விசைப்பலகை மற்றும் டிராக்பேட் அனைத்து வகையான பயனர்களுக்கும் பொருந்தாது.Zenbook Pro 14 Duo OLED இன் விலை சற்று திணறடிப்பதாக இருக்கிறது. 32ஜிபி ரேம் கொண்ட 12வது ஜென் இன்டெல் கோர் ஐ9 செயலி மூலம் இயக்கப்படும் புதிய லேப்டாப்பின் விலை கிட்டத்தட்ட ரூ. 2.3 லட்சத்துக்கும் மேல் இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட லேப்டாப் இன்னும் கூடுதல் விலைக்கு வருகிறது.  எனவே சாமானியர்கள் வாங்குவதற்கு ஏற்றதாக இருக்காது. ஆனாலும் ஒரு சிறப்பான அனுபவத்தை பெற நினைப்பவர்களுக்கு  Zenbook Pro 14 Duo OLED  சிறப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை