லேப்டாப் மற்றும் மொபைல் தயாரிப்பு நிறுவனமான, ஆசுஸ் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ‘விவோபுக் 13 ஸ்லேட்’ என்ற புதிய லேப்டாப்பை வெளியிட்டு இருக்கிறது. இதனை 2 இன் 1 யூஸாக, அதாவது லேப்டாப் மானிட்டரை தனியாக பிரித்து, அதனை நாம் டேபுளட்டாக பயன்படுத்த முடியும்.
இது குறித்து ஆசுஸ் நிறுவனம் கூறும் போது, “ உலகிலேயே முதன் முறையாக, 13.3 இன்ச் OLED Windows Detachable லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறோம். இந்த லேப்டாப் வாடிக்கையாளர்களுக்கு கையாளுவதற்கு எளிதாக இருப்பதோடு, எளிதாக எங்கும் எடுத்துசெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியிருக்கிறது.
இதனுடன் வரும் ASUS Pen 2.0 யை சார்ஜ் போடுவதற்கு ஏதுவாக, இந்த லேப்டாப்பில் யூஎஸ்பி C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 30 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும் இந்த பென்னை ஒரு முறை சார்ஜ் செய்தால், 140 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். ஆசுஸ் விவோபுக் 13 ஸ்லேட் லேப்டாப் 13.3 இன்ச் ஸ்கிரீனுடன் 16:9 OLED HDR டிஸ்ப்ளேவையும் உள்ளடக்கியுள்ளது.
இவை மட்டுமல்லாது, 1920 x 1080 ரிசோலிஷன், 1,000,000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ, 0.0005 நிட்ஸ் டீப் பிளாக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 50 வாட்ஸ் பேட்டரியை கொண்டுள்ள இந்த லேப்டாப்பை ஒரு முறை ரிசார்ஜ் செய்யும் போது, 9 மணிநேரம் வரை லேப்டாப்பை பயன்படுத்த முடியும்.
அத்துடன்170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், டால்பி ஆட்டம் ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்