புதிய லேப்டாப் வாங்குவதற்காகத் திட்டமிடுகிறீர்களா? தற்போதைய 2022ஆம் ஆண்டின் அமேசான் சம்மர் சேல் உங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு. அமேசான் தளத்தில் தற்போது தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும், மின் பயன்பாட்டு பொருட்கள், லேப்டாப்களைக் குறித்து இங்கே காணலாம். 


பெரும்பாலான பணிகளை லேப்டாப்பில் செய்பவர்களுக்கு அதன் மீதான பணிச்சுமை அதிகமாக இருப்பது தெரியும். மேலும், காலப்போக்கில், லேப்டாப்பின் பெர்மான்ஸ் படிப்படியாக குறைவதையும் நாம் காண முடியும். எனவே லேப்டாப்களை அப்க்ரேட் செய்வதையோ, புதிதாக வாங்குவதையோ மட்டுமே நாம் செய்துகொண்டிருக்க வேண்டும். 


சமீப காலங்களில் வீட்டில் இருந்தே பணியாற்றும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறைகளும், ஆன்லைன் கல்வி முறைகளும் நல்ல லேப்டாப்களை வாங்க வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கின்றன. நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டை மொத்தமாக காலி செய்யக்கூடிய அளவிலான விலையில் பெரும்பாலான நல்ல லேப்டாப் மாடல்கள் விற்கப்படுகின்றன. மேலும், சில குடும்பங்களில் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு லேப்டாப்கள் தேவைப்படும் சூழலும் உருவாகியுள்ளது. எனவே பட்ஜெட் விலையிலான லேப்டாப்களை வாங்குவது பலருக்கும் தேவையாக மாறியுள்ளது. உங்கள் லேப்டாப்பை மாற்ற திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், தற்போதைய அமேசான் சம்மர் சேல் தள்ளுபடிகளுடன் வாங்கும் போது நல்ல தொகையை மிச்சப்படுத்தலாம். 


லேப்டாப்களில் சுமார் 73 சதவிகித தள்ளுபடி வரை அமேசான் தளத்தில் வழங்கப்படுகிறது. எனினும், இவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, அந்தந்த லேப்டாப் நிறுவனங்களிடமே விற்பனை செய்யப்பட்டு, அவை புதியவை போல செயல்படுகின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டு, மீண்டும் விற்பனைக்கு விடப்படுபவை. இவை விற்பனையாளரின் வாரண்டியுடன் வருவதால் இதுகுறித்து வருந்த தேவையில்லை. இந்த லேப்டாப்களுள் சிறந்த மாடல்கள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம். 


DELL Latitude ‎E5440-i5-8 GB-120 GB லேப்டாப்: 


க்ரே நிறத்தில் விற்பனை செய்யப்படும் இந்த லேப்டாப், Intel Core i5 பிராசஸ்ரும், 8GB RAM வசதியும் கொண்டது. மேலும் இதன் ஸ்டோரேஜ் அளவு 120GB என வரையறுக்கப்பட்டுள்ளது. 14 இன்ச் அளவிலான திரை கொண்ட இந்த லேப்டாப் அன்றாடப் பயன்பாட்டுக்கு உதவிகரமாக இருக்கும்.  இதன் விலை 69,990 ரூபாய். தள்ளுபடி விலையில் இது 22,146 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



இதன் பிற சிறப்பம்சங்கள்:


1. ஆபரேடிங் சிஸ்டம்: விண்டோஸ் 10


2. ரிசொல்யூஷன்:  ‎1366 x 768 pixels


3. RAM: 8 GB


4. எடை: 2 கிலோ


5. உயரம்: 8 செண்டிமீட்டர்


6. அகலம்: 20 செண்டிமீட்டர்


 


HP Probook 6570b-i5-4 GB-240 GB லேப்டாப்:


15.6 இன்ச் அளவிலான திரை கொண்டிருக்கும் இந்த லேப்டாப்பில் Intel Core i5 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் RAM அளவு 4GB எனவும் ஸ்டோரேஜ் அளவு 240 GB எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விலை 1,12,000 ரூபாய். தள்ளுபடி விலையில் இது 29,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



இதன் பிற சிறப்பம்சங்கள்:


1. ஆபரேடிங் சிஸ்டம்: விண்டோஸ் 7


2. ரிசொல்யூஷன்:  ‎1366 x 768 pixels


3. RAM: 4 GB


4. எடை: 2.5 கிலோ


5. உயரம்: 50 மில்லிமீட்டர்


6. அகலம்: 15 செண்டிமீட்டர்


 


HP EliteBook 840 G1 Intel i5 4th Gen HD லேப்டாப்:


மிகக் குறைந்த விலையில், மிக வேகமான பெர்பாமன்ஸ் அளிக்கும் லேப்டாப் மாடல் இது, 8GB RAM வசதி, Intel Core i5 பிராசஸர் கொண்டுள்ள இந்த மாடலின் ஸ்க்ரீன் அளவு 14 இன்ச் ஆகும். இதன் விலை 89,999 ரூபாய். தள்ளுபடி விலையில் இது 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



இதன் பிற சிறப்பம்சங்கள்:


1. ஆபரேடிங் சிஸ்டம்: விண்டோஸ் 10 ப்ரோ


2. ரிசொல்யூஷன்:  ‎1366 x 768 pixels


3. ஹார்ட் ட்ரைவ் அளவு: ‎500 GB


4. எடை: 2.5 கிலோ


5. உயரம்: 1 இன்ச்


6. அகலம்: 10 இன்ச்