வொர்க் ஃபிரம் ஹோமோ அல்லது அலுவலக வேலையோ எதுவா இருந்தாலும் பலரின் சாய்ஸாக இருப்பது HP நிறுவனத்தின் Chromebook ஆகத்தான் இருக்கும் .  காரணம் அது பட்ஜெட் விலையில் இருப்பதும் , தேவையான அடிப்படை வசதிகளை கொண்டிருப்பதும்தான்.


இந்நிலையில் HP  நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய Chromebook x360 14a ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. “இன்றைய ஹைப்ரிட் கற்றல் சூழலில் PCகளின் முக்கியப் பங்கைக் கொண்டு, டிஜிட்டல் கற்பவர்களுக்கு அன்றாடப் பணிகளுக்குத் தேவையான செயல்திறனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய HP Chromebook x360 14a ஐ அறிமுகப்படுத்துகிறோம். இது மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்" என மூத்தர் இயக்குநர் விக்ரம் பேடி தெரிவித்துள்ளார். Chromebook x360 14a இல் இருக்கும் வசதிகள் மற்றும் விலை குறித்த விவரங்களை பார்க்கலாம் .




வசதிகள் :


புதிய HP Chromebook x360 14a ஆனது 14-இன்ச் HD டச் டிஸ்பிளேயுடன் 81 சதவிகித ஸ்கிரீன் பாடியுடன் வருகிறது. எளிமையான அனுகலுக்காகவும், ஷார்ட் கட் கீ-போர்ட் வசதிக்காவும் கூகுளின் “Everything” கீ வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. HP Chromebook x360 14a ஆனது Intel Celeron N4120 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு திறனுடன் வருகிறது. இந்த லேப்டாப் 1.49kg எடையுடையது மற்றும் HP ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் பேட்டரியை கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 மணிநேரம் வரை நீடிக்கும் என ஹச்.பி நிறுவனம் கூறுகிறது. வீடியோ அழைப்புகளுக்கு, இது HD கேமராவைக் கொண்டுள்ளது. மடிக்கணினி Realtek RTL8822CE 802.11a/b/g/n/ac (2×2) Wi-Fi மற்றும் ப்ளூடூத் 5.0 உடன் வருகிறது. போர்ட்களில் 2 x SuperSpeed ​​USB Type-C 5Gbps (USB பவர் டெலிவரி, DisplayPort 1.4), 1 x SuperSpeed ​​USB Type-A (5Gbps) மற்றும் 1 x ஹெட்ஃபோன்/மைக்ரோஃபோன் காம்போ ஆகிய இணைப்புகளை கொண்டுள்ளது.




விலை :


HP ஆனது புதிய Chromebook ஐ Chromebook x360 14a இந்திய சந்தையில் ரூ 29,999 க்கு வெளியிட்டுள்ளது. Chromebook x360 14a ஆனது கடந்த ஆண்டு அக்டோபரில் AMD CPU உடன் கிடைத்தது. இப்போது Intel செயலியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது  மினரல் சில்வர், செராமிக் ஒயிட் மற்றும் ஃபாரஸ்ட் டீல் வண்ணங்களில் கிடைக்கிறது.  மேலும் நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தின் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ரீடெய்ல் கடைகளிலும்   Chromebook x360 14a ஐ ஆடர் செய்து பெற்றுக்கொள்ளலாம் .