ஏசர் நைட்ரோ 5 (2022) கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் ஆகி உள்ளது. இந்த சாதனம் ரூ.84,999 த்தில் இருந்து துவங்குகிறது. இந்த ஏசர் நைட்ரோ 5 (2022) லேப்டாப்பின் பிற குறிப்பிடத்தக்க அம்சங்களை விரிவாக பார்க்கலாம். ஏசர் நைட்ரோ 5 (2022) கேமிங் லேப்டாப்  இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்  12-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-12500எச் அல்லது இன்டெல் கோர் ஐ7-12700எச் செயலி உடன் இயக்கப்படுகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.84,999 இல் இருந்து தொடங்குகிறது. ஏசர் தனது சமீபத்திய கேமிங் லேப்டாப் ஆக ஏசர் நைட்ரோ 5 (2022) கேமிங் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த லேப்டாப் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 16 ஜிபி ரேம் மற்றும் ஆர்ஜிபி பேக்லிட் கீபோர்ட்களுடன் வருகிறது. எல்லா கேமிங் லேப்டாப் போலவும், இந்த லேப்டாப்பின் கீபோர்டிலும் வண்ணங்கள் ஒளிரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.



இந்த ஏசர் லேப்டாப்பின் விலை விவரங்கள் மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், ஏசர் நைட்ரோ 5 (2022) லேப்டாப்-ன் ஆரம்ப விலை ரூ.84,999 ஆக உள்ளது. இந்த லேப்டாப்  ஏசர் ஷோரூம், அமேசான், க்ரோமா மற்றும் விஜய் சேல்ஸ் ஆகிய தளங்களில் வாங்கக் கிடைக்கும்.


ஏசர் நைட்ரோ 5 (2022) 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-12500எச் அல்லது இன்டெல் கோர் ஐ7-12700எச் செயலி உடன் இயக்கப்படுகிறது. அதாவது இதன் அடிப்படை மாறுபாடான 8 ஜிபி ரேம் வேரியண்ட் இன்டெல் கோர் ஐ5-12500எச் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப்பின் விலை ரூ.84,999 ஆக இருக்கிறது. அதேபோல் 16 ஜிபி ரேம் வேரியண்ட்  இன்டெல் கோர் ஐ7-12700எச் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் வேரியண்ட் விலை ரூ.1,09,999 ஆக இருக்கிறது.



ஏசர் நைட்ரோ 5 (2022) லேப்டாப் 16:9 ஸ்க்ரீன் ரேஷியோவையும், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் கொண்டுள்ளது. மேலும், ஏசர் நைட்ரோ 5 (2022) லேப்டாப்பின் டிஸ்ப்ளே 170 டிகிரி கோணங்களுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே  80% டிஸ்ப்ளே டூ பாடி ரேட் கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த ஏசர் நைட்ரோ 5 (2022) லேப்டாப்பின் கீபோர்ட்  RGB-பேக்லிட் கீபோர்ட் ஆதரவோடு வருகிறது. சிப்செட் 12 ஜிபி வரையிலான இரட்டை சேனல் டிடிஆர்4 ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பகத்துடன் வருகிறது. அதேபோல் 2.5 இன்ச் எச்டிடி வரை இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த லேப்டாப்  என்வீடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 30 ஜிபியூ வசதியோடு வருகிறது.


அதேபோல் இந்த லேப்டாப்  3-பின் 180வாட்ஸ் ஏசி அடாப்டருடன் 4செல் 57.5Whr பேட்டரி வசதியோடு இருக்கிறது. கனெக்ஷன் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், கில்லர் வைஃபை 6 எக்ஸ்1650ஐ, ப்ளூடூத் வி5.1, எச்டிஎம்ஐ 2.1, 1 எக்ஸ் யூஎஸ்பி 3.2 ஜென் 1 போர்ட் ஆதரவோடு வருகிறது. மேலும் இதில் 3.2 ஜென் 2 போர்ட், 1 யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆதரவோடு வருகிறது. ஆடியோ வசதிக்கு என மடிக்கணினி  டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா மூலம் இயக்கப்படும் 2வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. இது மைக்ரோசாஃப்ட்டின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 11 ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த சாதனத்தை குளிர்விப்பதற்கு என இரண்டு ஃபேன்கள் உடன் வருகிறது. இந்த லேப்டாப் 2.5 கிலோ எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.