ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் களமிறங்கவுள்ளது. ’ஜியோஃபோன் நெக்ஸ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன் குறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் 44வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. XDA developers நிறுவனத்திற்கு இந்த ஃபோன் குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனைத் தயாரித்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். வரும் செப்டம்பர் முதல் இந்த போன் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோஃபோன் நெக்ஸ்ட்டின் Android 11 (Go Edition) ஆபரேடிங் சிஸ்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் பின்புறம் ஒரு கேமராவும், HD+ Display வசதியும் இருக்கும்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, ஜியோஃபோன் தொடக்க நிலைப் பயன்பாட்டுக்கானதாகவும், உலகத்தில் மிகவும் விலை குறைந்த 4G ஸ்மார்ட்போன்களுள் ஒன்றாக இருக்கும் எனவும் அறிவித்திருந்தார். XDA Developers என்ற கேட்ஜெட் குறித்த இணையப் பத்திரிகை இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. XDA Developers வெப்சைட்டின் தலைமை ஆசிரியர் மிஷால் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜியோஃபோனின் boot screenனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெளியிட்டிருந்தார். அதில் “JioPhone Next Created with Google” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி இருக்கப் போகிறது, Jio Phone Next?
ஜியோஃபோன்நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் LS-5701-J என்று குறிக்கப்படும் எனவும் Android 11 (Go Edition) அதில் ஆபரேட்டிங் சிஸ்டமாகச் செயல்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 720x1440 pixel டிஸ்ப்ளே வசதி இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும், Qualcomm QM215 SoC உடன், Qualcomm Adreno 308 GPU என்ற ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
Qualcomm Snapdragon X5 LTE modem வசதியும், Bluetooth v4.2, GPS, up to 1080p வீடியோ எடுக்கும் வசதி, LPDDR3 RAM, eMMC 4.5 storage ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் பின்புறத்தில் 13MP single cameraவும், முன்பக்கத்தின் 8MP செல்ஃபி கேமராவும் இருக்கும். Google Camera Go என்ற மென்பொருளும் Snapchat செயலியுடன் நேரடி இணைப்பும் இதில் கிடைக்கும்.
RAM குறைவாக இருந்தால், சில செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் போனால், அவற்றைத் தடுக்க DuoGo என்ற செயலி இதில் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
விலையைப் பொறுத்த வரை, இந்த ஸ்மார்ட்போன் 4000 ரூபாய்க்குக் குறைவாக இந்தியாவிலும், 50 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவாக வெளிநாடுகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 10 முதல் விற்பனை தொடங்கவுள்ளதென்றாலும், ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் இருந்து விலை குறித்தோ, ஸ்மார்ட்ஃபோனின் specifications குறித்தோ அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.