ஜியோ, அண்மைக்காலமாக இந்தியாவில் இது ஒரு மாயாஜால வார்த்தை. மிகவும் குறுகிய காலத்தில், சந்தையில் உள்ள இணைய சேவை வழங்குநர்களை (ஐஎஸ்பி- Internet Service Providers) பின்னுக்குத் தள்ளி, ஜியோ ஃபைபர் முன்னணியில் உள்ளது.
அதுவும் கரோனா ஊரடங்கு காலத்தில் எல்லாமே இணையவழியில் தான் என்றாகிவிட்ட காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
ஜியோ ஃபைபர் -, இந்தியாவில் மிகப் பிரபலமான ஃபைபர் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒருவராக மாறியதன் பின்னணியில் நிறைய காரணிகள் இருக்கின்றன.
ஒரு வாடிக்கையாளரை தக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதை ஜியோ மிக நேர்த்தியாகக் கையாள்கிறது என்றே கூற வேண்டும்.
என்ன மாதிரியான பிளான்களை வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள். மற்ற நிறுவனங்களின் ப்ளான்கள் என்னென்ன? அவற்றில் மக்கள் மத்தியில் அதிக அபிமானம் கொண்ட பிளான்கள் எவை? என பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து ஜியோ தனது டேட்டா ப்ளான்களை வடிவமைக்கிறது.
அப்படி உருவாக்கப்பட்டது தான் 1TB அல்லது 1,000 GB டேட்டாவை வெறும் ரூ.199 க்கு வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம்.
ஜியோ ஃபைபரின் ரூ.199 காம்போ (டேட்டா ஷேஷட்) ரீசார்ஜ் பிளான்:
ஜியோ ஃபைபர் அதன் பயனர்களுக்கு 1TB அளவிலான டேட்டாவை வெறும் ரூ.199 க்கு வழங்குகிறது (இதில் வரிகளை சேர்க்ப்படவில்லை).
இந்த 1TB டேட்டா மொத்தம் 7 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இத்துடன் பயனர்கள் 100 Mbps அளவிலான இணைய வேகத்தையும் பெறுகிறார்கள். டேட்டா லிமிட் - எஃப்யூபி எட்டிய பிறகு இந்த இணைய வேகம் 1 Mbps ஆக குறைக்கப்படும்.
டேட்டா நன்மையுடன் சேர்த்து, இந்த திட்டத்துடன் 7 நாட்களுக்கு ஃப்ரீ வாய்ஸ் கால் வாதியையும் பெறலாம். மொத்தமாக வரி சேர்க்கப்பட்டால், இந்த திட்டத்திற்கு ரூ.234.82 செலவாகும்.
இது ஒரு ‘Data Sachet; என்பதை வாடிக்கையாளர்கள் மறந்துவிடக் கூடாது. அதாவது ஒரு வாடிக்கையாளர் தனது ஸ்டாண்டர்ட் திட்டத்தால் வழங்கப்படும் அனைத்து டேட்டாவையும் முழுமையாகப் பயன்படுத்திய பிறகே இந்தத் திட்டத்தை வாங்க முடியும்.
ஜியோ ஃபைபர் அதன் ஒவ்வொரு திட்டத்துடனும் 3.3 TB டேட்டாவை பயனர்களுக்கு வழங்குவதால், சராசரி இணையத் தேவைகளைக் கொண்ட பயனருக்கு இந்த டேட்டா தொகுப்பின் தேவை மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஒருவேளை யாராவது எஃப்யூபி டேட்டாவை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு மிகக் குறைந்த அளவிலான டேட்டா தேவை இருந்தால் இந்த ஜியோ ஃபைபர் ரூ.199 மிகவும் திருப்திகரமான ஒரு ரீசார்ஜ் ஆக இருக்கும்.
ஒரு பயனர் ஏற்கெனவே வாங்கிய எந்தவொரு பிராட்பேண்ட் திட்டத்தின் மேலும் இந்த ‘டேட்டா ஷேஷட்’ பொருந்தும். இது போன்றதொரு திட்டத்தை ஏர்டெல், பிஎஸ்என்எல் இன்னும் பிற எந்த ஒரு நிறுவனமும் தங்களின் பயனர்களுக்கு வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஏர்டெல், பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் பிராட்பேண்ட் திட்டத்துடன் மாதாந்திர எஃப்யூபி டேட்டாவை விட்டு வெளியேறினால், அவர்களால் இத்தகைய கூடுதல் டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்ய முடியாது. இதுதான் இப்போது ஜியோ தரும் மாயாஜாலம்.
ரூ.199 உடன் கிடைக்கும் 1TB யிலிருந்து பயன்படுத்தப்படாத டேட்டா எதையுமே அப்படியே அடுத்த மாதத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.