பொதுவாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளுள் ஒன்று ஸ்டோரேஜ் பிரச்சனை. புகைப்படங்கள் எடுப்பது , வீடியோ எடுப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட காலக்கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பிரதான பிரச்சனைகளுள் ஒன்றுதான் நினைவக சேமிப்புதிறன் பற்றாக்குறை பலருக்கும் பொதுவான இந்த பிரச்சனைகளை சில ட்ரிக்ஸ் மூலம் இங்கு ஷார்ட் அவுட் பண்ணலாம் வாங்க.
கூகுள் பிளே ஸ்டோரின் மூலம் மெமரியை கூட்டுதல் :
உங்கள் ஸ்மார்போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தும் பிளே ஸ்டோரிற்குள் சென்று , அதில் உங்கள் profile ஐ கிளிக் செய்யுங்கள் , பின்னர் your device. பிறகு ‘manage apps’ என்னும் வசதியை கிளிக் செய்யவும். அதில் எந்த செயலி அதிக நினைவகத்தை அடைத்திருக்கிறது என்பதை பார்த்து அதனை நீக்குங்கள் . பின்னர் மீண்டும் அந்த செயலி வேண்டுமென்றால் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .இப்போது உங்களுக்கு நிறைய ஸ்பேஸ் கிடைக்கும்.
Google Files மூலம் நினைவகத்தை கூட்டுதல் :
உங்கள் மொபைலில் ‘Google Files’ என்பதை கிளிக் செய்யவும் . அதில் tops, listing Videos, Images பொன்ற டேக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் . ‘Large files’ என்னும் வசதி வரும் வரையில் இடது புறமாக ஸ்வைப் செய்யுங்கள் . பின்னர் ‘Large files’ வசதியை க்ளிக் செய்தால் அதில் வரும் அதிக மெமரி கொண்ட ஆவணங்களை நீக்குவதன் மூலம் உங்களுக்கான கூடுதல் ஸ்பேசை பெறலாம்.
WhatsApp மூலம் நினைவகத்தை கூட்டுதல் :
எல்லாமும் செய்து பார்த்துவிட்டே ஆனால் இன்னும் ஸ்டோரேஜ் இடையூறு இருக்கிறது என நினைத்தால் , அதற்கு காரணம் வாட்ஸப் தான் . அதில் தானாக சேமித்து வைக்கப்படும் , புகைப்படம் , வீடியோக்கள் பெருமளவில் குவிந்து கிடக்கும் . அதனை கேலரியில் இருந்து நீக்கியிருந்தாலும் மெஜஞ்சர் உள்ளே இருக்கத்தான் செய்யும் .Settings ---> storage and data.---> manage storage என்னும் வசதி மூலம் உள் சென்று 5MBக்கும் அதிகமான ஸ்டோரேஜை நீங்கள் காணலாம் அதில் தேவையில்லாத கோப்புகளை நீங்கள் நீக்கி , ஸ்பேசை மேம்படுத்தலாம்.
cloud service:
இது அவ்வளவு கடினமானது இல்லை. பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் போட்டோஸ் என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து . அதன் மூலம் புகைப்படம் , வீடியோ உள்ளிட்ட ஆவணங்களை கிளவுடிற்கு மாற்றி , மொபைலின் ஸ்டோரேஸை அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.
clear cache. :
இதனை செய்ய உங்கள் ஸ்மார்ட்போனில் settings என்ற வசதிக்குள் சென்று select apps என்பதை தேர்வு செய்துக்கொள்ளுங்கள் . பின்னர் எந்த செயலியில் cache ஐ நீக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்துclear cache என்னும் வசதியின் மூலம் cache ஐ எளிமையாக நீக்கலாம்
இது தவிர மெமரி கார் அல்லது SD கார்டை பயன்படுத்தியும் ஸ்பேசை அதிகப்படுத்தலாம்