உலகமே உற்று நோக்கும் மதுரை மாவட்டத்தில் கடைசி ஜல்லிக்கட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. வழக்கமாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என்கிற தொடர் வரிசையில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜனவரி 14 ல் அவனியாபுரம், ஜனவரி 15ல் பாலமேடு, ஜனவரி 16 ல் அலங்காநல்லூர் என்கிற வரிசை தான் இதுவரை பின்பற்றப்பட்டது. 


 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போதும் கொண்டாடப்படும். அதனால் அதை காண கூட்டமும் அலைமோதுகிறது. அலங்காநல்லூர் வாடிவாசல் காலை வெளியேறியதும் நேராக வந்து இடது புறம் திரும்பிச் செல்லும் படி எல் வடிவில் இருக்கும். இதனால் காளைகள் நின்று விளையாடி எதிர்பார்ப்பை தூண்டுகிறது. 


இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 16 ம் தேதி நடைபெற இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முழுஊரடங்கு காரணமாக இன்று மாற்றப்பட்டது. தொடர்ந்து இன்று காலை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 




காளைகளின் உடலில் குங்குமம், விபூதி, மஞ்சல், பூ மாலை போட்டால் பரிசு வழங்கப்படாது எனவும், மாடுபிடி வீரர்களை, மாட்டு உரிமையாளர்கள் தாக்கினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி மற்றும் விழா கமிட்டி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரலையில் காண :



தொடர்ந்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாடுகளுக்கும் தங்கக் காசு வழங்கப்படும் என்றும், சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 




அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் சுற்று முடிவில் 03, 39, 55, 57 ஆகிய எண்பொறித்த நான்கு பேர் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். முதல் சுற்றில் 115 காளைகள் களம் கண்டுள்ளது. அதில்மாடுபிடி வீரர்கள் 50 பேர் பங்கேற்ற நிலையில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 


முதல் சுற்றில் 5 காளைகளை அடக்கிய சமயநல்லூரை சார்ந்த கோபாலகிருஷ்ணன் முதலிடம் பிடித்தார். 4 காளைகளை அடக்கி விமல் என்பவர் இரண்டாவது இடத்திலும், 3 காளைகளை அடக்கி விஜயராஜன் மூன்றாமிடம் பிடித்துள்ளார். 


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 


இரண்டாம் சுற்று முடிவில் வாடிவாசலில் இருந்து மொத்தம் 224 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண