கல்வி அமைச்சகத்தால் (இந்தியஅரசு) நிதியளிக்கப்பட்ட இந்திய சமூகஅறிவியல் ஆராய்ச்சிக்குழுவின் (ICSSR) ஒரு பகுதியாக, இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின்(HITS) பொருளாதாரத்துறை (SLAAS)சார்பில் சனிக்கிழமையன்று ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 


நீர் பயன்பாடு:


காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். எஸ். ராஜேந்திரன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானி டாக்டர். ஆர். கோபிநாத் மற்றும் எல்.மாய கிருஷ்ணன் ,தமிழக அரசின் வேளாண்மைத்துறை துணைஇயக்குநர் உட்பட எட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் பங்கேற்றனர்.


பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன நுட்பங்கள், நெல் சாகுபடி மற்றும் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இதில், சார்பு துணைவேந்தர் ஆர்.டபிள்யூ. அலெக்சாண்டர் ஜேசுதாசன், இன்றைய உலகில் தண்ணீரின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், விரைவான நகரமயமாக்கலின் சவால்கள் மற்றும் தினசரி நீர் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார்.


பயிலரங்கு:


பயிலரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை சேர்த்து ICSSR க்கு சமர்ப்பிப்பதாக ஆராய்ச்சி இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், முனைவர் மா. சபரிசக்தி, உறுதியளித்தார். பல்கலைக்கழக நிர்வாகத் தலைவர்கள் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் மற்றும் அசோக்வர்கீஸ் ஆகியோரின் தொடர்ச்சியான ஊக்கமும் ஆதரவும் பெரிதும் பாராட்டப்பட்டது.