iQOO Neo5 SE செல்ஃபோன் Snapdragon 888 SoC மூலம் இயக்கப்படும் என்பதை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மொபைலானது சீனாவில் அறிமுகமாகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக செல்ஃபோனின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் iQOO Neo5 SE டீஸர் வீடியோவையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
செல்ஃபோனின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் இதில் அடங்கும். மொபைலின் கீழ் பகுதியில், USB Type-C போர்ட், ஒரு முதன்மை மைக்ரோஃபோன் மற்றும் SIM ஸ்லாட் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இந்த மொபைல் வெள்ளை, அடர் நீலம் மற்றும் நீலம் உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் இருக்கிறது.
இதற்கிடையில், அபிஷேக் யாதவ் என்பவர் வெளியாகவிருக்கும் iQOO Neo5 SE மற்றும் Neo 5s இன் படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
iQoo Neo 5s ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளே மற்றும் 66W விரைவான சார்ஜிங் திறன் கொண்ட 4,500mAh பேட்டரி ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்த செல்ஃபோன்களுக்கு வாடிக்கையாளர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Signal | வாட்ஸ் அப்க்கு டஃப் கொடுக்கும் சிக்னல்.. நச்சுனு வந்த வீடியோகால் அப்டேட்!!