தகவல் பரிமாற்ற செயலிகளில் டாப் பிராண்ட் என்றால் அது வாட்ஸ் அப் தான். புதுப்புது அப்டேட், வீடியோகால், வாய்ஸ்கால், பணப்பரிமாற்றம் என வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தே வைத்துள்ளது. ஆனால் வாட்ஸ் அப்பும் இடையே சறுக்கியது. கடந்த ஜனவரியில் சர்ச்சையில் சிக்கியது வாட்ஸ் அப். குறிப்பாக புதிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் சேவையை தொடர முடியும் என்றும், இல்லையென்றால் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தது. தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்வோம் என்ற வாட்ஸ் அப்பின் அறிவிப்பை பயனாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


என்னதான் நிறுவனத்தில் தனியுரிமைக் கொள்கை என்றாலும், பயனர்களுக்கான பிரைவசி என்பதை வாட்ஸ் அப் போன்ற மிகப்பெரிய தகவல் பரிமாற்ற செயலிகள் உறுதி செய்ய வேண்டுமென்று பலரும் கருத்து தெரிவித்தனர். இன்னும் ஒரு படி மேலே போய்,  பலர் வாட்ஸ் கணக்கில் இருந்து வெளியேறினர். இதனை பயன்படுத்தி டெலிகிராம், சிக்னல் போன்ற பல செயலிகள் உள்ளே நுழைந்தன. அப்போது மார்கெட்டை பிடித்த சிக்னல் ஆப் உள்ளே வந்தவர்களை தக்க வைத்துக்கொள்ள சில அப்டேட்களை  கொடுத்து வருகிறது. 
அந்த வகையில் வீடியோ காலில் 40 பேர் வரை ஒரே நேரத்தில் இணைந்திருக்கும் அப்டேட்டை சிக்னல் கொண்டு வந்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குரூப்பில் உள்ள மெம்பர்கள் மட்டுமே குரூப் காலில் சேர முடியும். குரூப்பில் இல்லாதவர்களை சேர்க்க முடியாது.




எப்படி?


1.சிக்னல் செயலியை ஓபன் செய்துகொள்ள  வேண்டும்
2.வலதுபுறம் உள்ள call ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
3. call ஐ ஸ்டார்ட் அல்லது Join Call
4. வீடியோ காலுக்கான நோட்டிபிகேஷன் அனைவருக்கும் செல்லும். அதன்மூலம் அவர்கள் இணையலாம்


2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் சிக்னல் செயலியை முதல்முறையாக பதிவிறக்கம் செய்தவர்கள் 1192% ஆக உள்ளது.  ஓராண்டு இடைவெளி கணக்கீடுப்படி ஆண்ட்ராய்ட் மற்றும் ios பயன்பாட்டில் டெலிகிராம் செயலி 98% அதிகரித்துள்ளது. 161மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப் அறிவிப்பு வெளியிட்ட ஜனவரியில் ராக்கெட் வேகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டது டெலிகிராமும், சின்னலும். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் பதிவிறக்கம் குறைந்தன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண