ஐபோன், ஐபேட் மற்றும் வாட்ச் பயனாளர்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட IOS 15 இயங்குதள புதுப்பித்தலை APPLE நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட IOS அப்டேட்டை ஒப்பிடுகையில் IOS 15 இல் ஏகப்பட்ட வசதிகள் அறிமுகப்பட்டுள்ளது. இதுவே பயனாளர்களின் ஆர்வத்திற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று. குறிப்பாக facetime, message, focus notification என பல வசதிகளை IOS 15 இல் புகுத்தியுள்ளது Apple நிறுவனம்.
எப்படி IOS 15 ஐ அப்டேட் செய்வது?
முதலில் உங்கள் ஐபோன், ஐபேட் , வாட்ச் உள்ளிட்ட சாதனங்களில் settings என்பதை கிளிக் செய்து , பிறகு கொடுக்கப்பட்ட general என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும் . பின்னர் தோன்றும் வசதிகளில் software update என்பதை கிளிக் செய்தால் 'checking for update' என்ற வசதி உங்களின் IOS புதுப்பித்தல் குறித்த விவரங்களை வெளியிடும். நீங்கள் இன்னும் ios14.8 பதிப்பை புதுப்பிக்கவில்லை என்றால் புதுப்பித்துக்கொள்ளுங்கள். முன்னதாகவே புதுப்பித்தவராக இருந்தால் "your iphone software is up to date " என வரும். மேலும் அதற்கு கீழே ALSO AVAILABLE என ‘upgrade to IOS 15' என்ற புதுப்பித்தலுக்கான லிங் கொடுக்கப்பட்டிருக்கும் . அதனை கிளிக் செய்து wifi வசதியின் மூலம் IOS 15 அப்டேட்டை பெறலாம்.
இப்போது புதுப்பிக்க வேண்டாம்!
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள IOS 15 ஆனது முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. இது ஒரு பீட்டா வெர்சன் போலத்தான். பயனாளர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். முன்னதாக IOS 14 வெளியான உடனே அப்டேட் செய்த பலருக்கும் மொபைலில் பிரவுசர் மற்றும் மெயிலை திறக்கும் போதெல்லாம் மொபைல் Restart ஆனது. எனவே இந்த புதிய IOS 15 இல் நிறைய பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. தற்போது IOS 15 ஐ பதிவிறக்கம் செய்த பலருக்கும், பல அப்ளிகேஷன்ஸ் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐபேட் புரோவில் உள்ள கீபோட் முற்றிலுமாக வேலை செய்யவில்லை என்கின்றனர் சிலர். இதையும் மீறி உங்கள் மொபைலையோ ஐபேடயோ அல்லது வாட்ச்சையோ சோதனை கருவியாக்க விருப்பப்பட்டால் தாராளமாக ios 15 ஐ பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
எப்போது அப்டேட் செய்யலாம்?
ஐஓஎஸ் 14 இல் ஒரு வாரம் கழித்து தீர்வு காணப்பட்ட புதுப்பித்தலை வழங்கியது Apple. அதேபோல ஒரு வாரம் காத்திருந்து புதுப்பிக்கலாம். நீங்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க விரும்பினால் இரண்டு வாரம் வரையிலும் காத்திருப்பது நல்லது. இரண்டு வாரங்களுக்கு மேல் IOS 15 ஐ அப்டேட் செய்யாமல் இருக்க கூடாது. அது சில நேரங்களில் உங்கள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.