பலரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களுள் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்கள் தங்கள் செயலிகள் மூலம் பணம் ஈடுவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுருந்தார் அதன் தலைவர் ஆடம். இந்நிலையில் தற்போது வெளியான சில தகவல்களின் அடிப்படையில் அந்த வசதியை விரைவில் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற அதிகம் பயனாளர்களை கொண்ட நாடுகளில் In-App Purchases பிரிவின் கீழ் இந்த வசதியை பெற முடிகிறது.
தற்போது iOS இயங்குதளத்தின் இன்ஸ்டாகிராம் அப்டேட்டில் இந்த புதிய வசதியை இணைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மாத சந்தாக்கட்டணங்கள் 0.99 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.73)
மற்றும் 4.99 டாலர் (இந்திய மதிப்பில் 360 ரூ) மாத சந்தா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் நேரடியாக இந்த சந்தா கட்டணம் , மாதம் 89 ரூபாய் என்ற அளவில் உள்ளது. சந்தாக்களை பெறும் நபர்கள் அதற்கான பேட்ஜ்களையும் பெற்றுக்கொள்ளலாம்.அமெரிக்காவில் முதலில் 360 ரூபாய் என்ற மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட சந்தாவானது பின்னர் 73 ரூபாய் என்ற மதிப்பில் அறிமுகமானது.இந்த சந்தா பிளான்களை பயன்படுத்துவதன் மூலம் கன்டெண்ட் கிரியேட்டர்கள் , இன்ஃபுளுயன்ஸர்ஸ் உள்ளிட்டவர்கள் தங்களின் புகைப்படம் , வீடியோவை விற்க முடியும்.
ட்விட்டரும் தனது பயனாளருக்கு இதே போன்ற ஒரு சேவையை வழங்குகிறது. ட்விட்டர் ப்ளூ என்ற வசதி இந்த மாதந்திர கட்டண சேவை மூலம் தனது பயனாளர்கள் எழுதும் blog, செய்திகள், துணுக்குகள் போன்றவற்றின் மூலம் பணம் ஈட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இன்ஸ்டாகிராம் ஐ.ஓ.எஸ் செயலிக்கு முதலில் அறிமுகமாகியுள்ள இந்த சேவையானது சோதனை முயற்சியில் உள்ளது விரைவில் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.