பொதுவாக உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுப் பொருட்களில் சுவை இருப்பதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு நாம் அனைவரும் அறிந்தது. இது ஓரளவிற்கு உண்மை என்ற போதிலும் கூட, சாலட்டுகளில் சுவை இல்லாமல் இருப்பதில்லை.அவை தயாரிக்கும் முறைகளைக் கொண்டு அவற்றின் சுவை மாறிவிடுகிறது அவ்வளவுதான்.


நீங்கள் ஒரு காய்கறி சலட்டை தயாரிக்க முற்படும்போது,உங்களுக்கு பிடித்தமான பொறித்த அல்லது வறுத்த ஏதாவது ஒரு உணவை அதில் சேர்த்துக் கொள்வது, ஆர்வமாக  சாலட்டுகளை விரும்பி உண்பதற்கு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.


உதாரணத்திற்கு உங்களுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடிக்கும் என்றால்,நீங்கள் இன்னும் அந்த சாலட்டில் சிறிதளவு உருளைக்கிழங்கு சிப்ஸ் சேர்த்துக் கொள்வது, ஆரம்ப நாட்களில் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.


உங்களுக்கு பிடித்தமான சாலட்டை தயாரித்து சாப்பிடும் அதே வேளையில்,உடம்பில் இருக்கும் நச்சுகளையும் எவ்வாறு நீக்குவது என்பதை தற்போது காணலாம்.


கேரட் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.


பாதாம்,முந்திரி, பிஸ்தா,இஞ்சிச்சாறு,சிறிய அளவு எலுமிச்சை சாறு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,


மற்றும் தக்காளி, தேவைக்கு ஏற்றார் போல பச்சை மிளகாய்,துண்டாக நறுக்கியது.


அல்லது மிளகுத்தூள்,எண்ணெயில் வதக்கிய பூண்டு, கருப்பு எள்  தேவையான அளவு.


கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி  துண்டு துண்டாக நறுக்கியது, தேவையான அளவு.


உங்களுக்கு தேவைப்பட்டால் உப்பு.


உங்களுக்கு விருப்பமான பொறித்த அல்லது வறுத்த உணவுப் பொருளையும் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.


கேரட்டை தூண்டுதுண்டாக பூப்போல சீவிக்கொள்ளுங்கள். பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவு பூண்டினை எண்ணெயில் அல்லது எண்ணெய் இல்லாமலோ, வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு இஞ்சியை இடித்து சாறாக எடுத்துக் கொள்ளுங்கள். இதே போல எலுமிச்சியையும் பிழிந்து சாறாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


முதலில் துருவல்களாக நறுக்கி இருக்கும் கேரட்டை, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதில் துண்டு துண்டுகளாக உடைத்து வைத்திருக்கும் பாதாம்,பிஸ்தா, மற்றும் முந்திரி ஆகியவற்றை அதில் போடவும். உங்களுக்கு பிடித்தமான வறுத்த அல்லது பொறித்த உணவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இதில் போடவும்.பின்னர் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.மேலும் இதில் கால் டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு,சேர்க்கவும்.இதே போலவே துண்டு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் தக்காளியை போடவும்.இதன் பிறகு,இதில் பொடி செய்து வைத்திருக்கும் மல்லி மற்றும் கருவேப்பிலை இலைகளை போடவும். கடைசியாக எள்ளை,இதில் தேவையான அளவு சேர்த்து,இவை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். இப்போது உங்களுக்கு விருப்பமான உணவுடன் சேர்ந்த சுவையான காய்கறி சாலட் தயாராகிவிட்டது.


உங்களுக்கு தேவை என்றால் இந்த காய்கறி  சாலட்டில் பச்சை பட்டாணி,கோஸ் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றையும் சேர்த்து நீங்கள்  சாப்பிடலாம்.


இதைப் போலவே,சாலட் பச்சையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.உங்களுக்கு பச்சை காய்கறிகளை சாப்பிட விருப்பமில்லை என்றால், அரைவேக்காட்டில் வேகவைக்கப்பட்ட, காய்கறிகளை சேர்த்து,இத்தகைய சாலட்களை தயாரித்து,நீங்கள் சாப்பிடலாம்.


இப்படி சாலடுகளை சாப்பிடுவது என்பது நம் உடலுக்கு மிகவும் தேவையான,ஆரோக்கியமான ஒன்றாகும்.இதிலும் கூட  டிடாக்ஸின் எனப்படும் நச்சு நீக்கிகளையும், சேர்த்து சாப்பிடுவது என்பது,உடலில் இருக்கும்,தேவையில்லாத கழிவுகளையும்,கொழுப்புக்களையும் நீக்குவதற்கு ஏதுவாக இருக்கும்.


இப்படி வாரத்திற்கு மூன்று முறை, ஏதேனும் ஒரு உணவு வேளையில், காய்கறி சாலட்டை எடுத்துக் கொள்வதினால், ஆரோக்கியம்,உடலின் சுறுசுறுப்பு,  ரத்த குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுவது, புற்றுநோய் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுவது,தோல் நோய்கள் வராமல் தடுப்பது என, உடலில் இருக்கும் கழிவுகள் நீங்குவதினால் மேற்கண்ட நன்மைகள் கிடைக்கின்றன.