ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் நேற்று மாலை முதல் சில சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதாவது தாங்கள் அனுப்பும் மெசேஜ்கள் அனுப்பிய சில நொடிகளிலேயே மறைந்துவிடுவதாகவும் , அவற்றை பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இணையதள சேவைகளின் நிலை கண்காணிப்பு நிறுவனம் டவுன்டெக்டரின் கூற்றுப்படி, ஜூலை 5-ஆம் தேதி இரவு 8 மணி முதல் Instagram  இல் இது போன்ற பிரச்சனைகள் தொடர்பான புகார்கள் தொடந்து வந்த வண்ணம் இருப்பதாக  தெரிகிறது. மேலும் இரண்டு அவுட்டேஜ் பிரச்சனைகளை அவர்கள் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் . அதில் ஒன்று ஒன்று ஜூலை 5 அன்று இரவு 11:18 மணிக்கும் மற்றொன்று ஜூலை 6 ஆம் தேதி காலை 10:18 மணிக்கும் பதிவாகியுள்ளது.






ஃபேஸ்புக்  :


மேற்கண்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேஸ்புக் மெசஞ்சர் செயலிழந்துள்ளது. டவுன் டிடெக்டரின் கூற்றுப்படி, 3,200-க்கும் மேற்பட்ட பயனர்கள் செய்தியிடல் தளத்தில்  இந்த சிக்கல் தொடர்பாக புகாரளித்துள்ளனர்.கிட்டத்தட்ட 89 சதவீத பயனர்கள் தங்களுக்கு செய்திகளை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 8 சதவீத பயனர்கள் பொதுவாக பயன்பாட்டில் உள்ள சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர், அதே நேரத்தில் 3 சதவீதம் பேர் தங்களால் தளத்தின் உள்ளே நுழைய முடியவில்லை என தெரிவித்துள்ளனர். 






இன்ஸ்டாகிராம் :


இன்ஸ்டாகிராமிலும் இதே போன்ற சிக்கல் எழுந்துள்ளது. இதன் முலம் இரண்டையும் நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்பது தெளிவாக புரிகிறது. டவுன் டிடெக்டர் அறிக்கையின்படி, சுமார் 2,100 பயனர்கள் Instagram இல் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.79 சதவீத பயனர்கள்  பொது பயன்பாட்டில் சிக்கல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர், அதே நேரத்தில் 12 சதவீதம் பேர் தங்களால் உள்நுழைய முடியாது என்று கூறியுள்ளனர்.மேலும் 9 சதவீதம் பேர் இணையதளத்தில் பயன்பாட்டை அணுக முடியவில்லை என்று கூறியுள்ளனர். ஒருவர் குறுஞ்செய்தி அனுப்புவதில் சிக்கல் இருக்கிறது என தெரிவித்துள்ளார்


விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.