சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த தளத்தில் இளைஞர்கள் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர். அத்துடன் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் தான் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது இன்ஸ்டா செயலியில் ஒரு சில புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வந்த வண்ணம் உள்ளது.
அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராம் லைவ் போடுவதில் ஒரு புதிய வசதியை இன்ஸ்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இதற்கு முன்பாக நீங்கள் இன்ஸ்டாகிராமில் லைவ் செய்வதற்கு முன்பாக அதை ஒரு பதிவாக போட முடியாது. நீங்கள் ஒரு ஸ்டேஸ் மாதிரி வைக்க முடியும். இதனால் பலருக்கும் தங்களுடைய ஃபாலோவர்ஸ் இடம் இன்ஸ்டாகிராம் லைவ் குறித்து முன்பாக தெரிவிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்த சிக்கலை போக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் லைவ் வருவதை 90 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியை எப்படி செய்ய வேண்டும்?
இன்ஸ்டாகிராம் லைவ் வசதியை சில நாட்களுக்கு முன்பாகவே தங்களுடைய ஃபாலோவர்ஸ்களிடம் தெரிவிக்க நினைப்பவர்கள் முதலில் தங்களுடைய கணக்கில் உள்நுழைந்து இன்ஸ்டா லைவ் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் 'schedule' என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதை கிளிக் செய்யும் போது அந்த லைவ் காரணம் அல்லது பெயரை பதிவிட்டு, எந்த நாள், எந்த நேரம் உள்ளிட்ட விவரத்தை அளிக்க வேண்டும். அதன்பின்னர் இந்த இன்ஸ்டா லைவ் தொடர்பான விவரத்தை ஒரு படத்துடன் ஒரு பதிவாக பகிர வேண்டும். அப்போது இதை பார்க்கும் மற்றவர்களுக்கு ஒரு லைவ் லிங்க் கிடைக்கும். இதை வைத்து அவர்கள் லைவ் நடக்கும் நாளில் இன்ஸ்டா லைவை காண முடியும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஃபேஸ்புக்,வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் சுமார் 6 மணி நேரம் வரை தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கின. அப்போது பலரும் இந்த செயலிகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தனர். இதனால் இனி வரும் காலங்களில் இதுபோன்று செயலிகள் முடங்கினால் அதை அந்தந்த செயலிகளில் ஒரு செய்தியாக தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய வசதியையும் கொண்டு வர ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Great Indian Amazon sale | அமேசான் ஆஃபர்.. தவறவிடக்கூடாத 5 கிட்சன் பொருட்கள்!!