இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்கள் உள்ளிட்ட இணைய பொழுதுபோக்கு தளங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை கடந்த மே 26 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.   இந்நிலையில் ஐக்கியநாடுகள் சபை இந்தியாவின் இந்த முடிவு சர்வதேச டிஜிட்டல் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளது. 


இந்தியாவின் திருத்தப்பட்ட முக்கிய  டிஜிட்டல் கொள்கைகள் என்ன ?


 டிவிட்டர் , ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மூன்று பொறுப்புகளில் இந்திய அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும். தவறான கருத்துகளை யார் முதலில் பரப்பினார்கள் என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட வலைத்தள நிர்வாகம் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.



சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து இந்தியாவின் பிரபலங்கள் யாரேனும் முடக்கப்பட்டால் அதற்கான காரணங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்கள் குறித்த  விவரங்களை ( U, U/A 7+, U/A 13+, U/A 16+, and A தளங்கள் வகைப்படுத்த வேண்டும். அவ்வாறு வகைப்படுத்தும் பொழுது அது சிறுவர்களின் அனுகலை கட்டுப்படுத்தும், சட்ட விரோதமான அல்லது புண்படுத்தும் கருத்துகளை யாரேனும் பதிவிட்டிருந்தால் அதனை 24 மணி நேரத்தில் வலைத்தள நிர்வாகம் நீக்க வேண்டும்


ஐ.நா வருத்தம்  :
 
இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய திருத்த தகவல்தொழில்நுட்ப சட்டமனது மனித உரிமைகளுக்கு எதிரானது என ஐ.நா அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவின் இடைநிலை டிஜிட்டல் மாற்றங்கள்  சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என  இந்தியாவிற்கு கடிதம் மூலம் ஐ.நா தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கொள்கைகளை ஒருபோதும் நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் இது குறித்து இந்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் ஐ.நா கேட்டுக்கொண்டது.


 




ஐ.நாவிற்கு இந்தியா பதில் :


தற்பொழுது ஐ.நா வெளியிட்ட கடிதத்திற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு , இந்திய தொழில்நுட்ப மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இணைந்து மக்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கங்களிடம்  கடந்த 2018-ஆம் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளை பரப்புவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த  முடிவு எடுக்கப்பட்டதாகவும் இதனால் மக்களிம் பேச்சு மற்றும் கருத்துரிமைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் மக்களின் கருத்துரிமைக்கு பாதிப்பு ஏற்படும் என  தெரிவிப்பது முற்றிலும் தவறான செயல் என இந்திய அரசு தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் சாமானிய மக்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது