தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் என்னதான் பல்வேறு வசதிகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு வந்தாலும் அவற்றை எல்லாம் சில நிமிடங்களை தகர்த்து சுக்கு நூறாக்கி விடுகின்றனர் ஹேக்கர்கள். அதுபோல், செயலிகளுக்கே தெரியாத பல குறுக்கு வழிகளின் மூலம் அதன் பல்வேறு சிறப்பம்சங்களை பயன்படுத்தும் யோசனைகளை கண்டுபிடித்து இணையதளத்தில் கசியவிட்டு விடுகிறார்கள்.


அந்த வகையில் பேஸ்புக் நிறுவனத்தின்…. மன்னிக்கவும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியின் பிரபலமான ஒரு வசதியான ஸ்டேட்டஸ்கள் குறித்த பல டிரிக்ஸ்கள் இணைய உலகில் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் தங்களின் கருத்துக்கள், உணர்வுகள், நிகழ்வுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் ஸ்டேட்டஸ் வசதி மூலம் தங்கள் காண்டேக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு காட்ட முடியும்.


இதை யார் யார் பார்க்கலாம்? யார் யார் பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளையும் ப்ரைவசி வசதியின் மூலம் நாம் விதிக்கலாம். அதே போல் நாம் வகைக்கும் ஸ்டேட்டஸ்களை யார் யார் எந்த நேரத்தில் பார்த்தார்கள் என்பதையும் அறிய முடியும். ஆனால், மற்றவர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை அவர்களுக்கு தெரியாமலேயே சுலபமாக பார்க்க இயலும் என்றால் நம்ப முடிகிறதா..? வழி இருக்கிறது அதை தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.



  • வாட்ஸ் அப் செயலியை திறக்கவும்

  • ஹோம் ஸ்க்ரீனின் வலது புறமாக இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்

  • அதில் பல்வேறு பட்டன்கள் இருக்கும். நீங்கள் செட்டிங்ஸ் பட்டனை அழுத்துங்கள்

  • இப்போது புதிதாக காட்டப்படும் திரையில் உள்ள அக்கவுண்ட் என்ற பட்டனை அழுத்திடுங்கள்

  • அடுத்ததாக திறக்கப்படும் திரையில் பிரைவசி என்ற பட்டனை அழுத்துங்கள்

  • அதில் இருக்கும் DISABLE Read Receipt என்ற ஆப்சனை தொட்டும் அதை செயலிழக்க செய்யுங்கள்.

  • Read Receipt என்ற இந்த வசதியை செயலிழக்க வைப்பதன் மூலமாக உங்கள் காண்டேக்ட் வரிசையில் உள்ளவர்கள் வாட்ஸ் அப்-இல் வைக்கும் ஸ்டேட்டஸ்களை உங்களால் காண முடியும். ஆனால், அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பதை அவர்களால் அறிய இயலாது.


வாட்ஸ் அப் செயலியின் மெசேஜின் வசதியிலும் இந்த  Read Receipt வசதியை பயன்படுத்தி நாம் மற்றவர்கள் அனுப்பியை மெசேஜை அவர்களுக்கு தெரியாமல் படிக்க முடியும். நாம் அவர்களின் மெசேஜை படித்தாலும் அனுப்பியவருக்கு நீல டிக் காட்டாது. ஆனால் இதில் உள்ள ஒரு குறை என்னவென்றால் Read Receipt ஐ பயன்படுத்தினால் நாம் அனுப்பிய மெசேஜை மற்றவர்கள் படித்தார்களா இல்லையா என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள இயலாது.