Puneeth Rajkumar Demise | மூன்று நாளுக்கு முன்புதான் இந்த மகிழ்ச்சி.. வாழ்க்கை எவ்வளவு நிலையில்லாதது!! உருகும் ரசிகர்கள்..
மூன்று நாளுக்கு முன்புதான் இந்த மகிழ்ச்சி.. வாழ்க்கை எவ்வளவு நிலையில்லாதது என விக்ரம் ஹாஸ்பிட்டலுக்கு வெளியில் உருகும் ரசிகர்கள்..

தங்களின் ஆதர்ச நடிகரின் திடீர் மரணத்தைத் தாங்க முடியாத ரசிகர்கள், அவர் மூன்று நாட்களுக்கு முன்னதாக யஷ், மற்றும் சிவா ஆகியோருடன் மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். உடற்பயிற்சி செய்யும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் முதலுதவிக்குப் பிறகு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அதிர்ச்சியூட்டும் அவரது மரணத்தை அடுத்து டிவிட்டரில் பல்வேறு மொழி நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பி.எஸ் யெடியூரப்பா, சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் புனீத் ராஜ்குமார் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்