கம்யூட்டர் என்றாலே வெறும் ஸ்கிரீன் மட்டுமல்ல. சிபியூ, கீபோர்ட், மவுஸ் என ஒருசேர அடங்கிய ஒரு மெஷின்தான் கம்யூட்டர். கம்யூட்டரின் அடுத்த வெர்ஷனாக வந்தது லேப்டா. தனித்தனியாக எதுவுமே வேண்டாம் சிபியூ, கீபோர்ட், மவுஸ் எல்லாமே ஒரே இடத்தில் என்ற கான்செப்டுடன் போகும் இடமெல்லாம் எடுத்துகொண்டு போகலாம் என்ற சூப்பர் வசதியுடன் லேப்டாப்கள் சந்தையில் இறங்கின. என்னதா லேப்டாப்புக்குள் மவுஸ், கீபோர்டு என்றாலும் கணினியிலேயே அதிக வேலைப்பளு உள்ளவர்களுக்கு சற்று கஷ்டமான விஷயம்தான் இது. 




தனியாக கையில் மவுஸை பயன்படுத்தும் வேகம் லேப்டாப்களில் விரலை தேய்த்தால் வராது. இதனால் லேப்டாப் பயன்படுத்தினாலும் சிலர் தனியாக மவுஸை பயன்படுத்துவார்கள். அதனை எளிமையாக்க வேண்டுமென்று இப்போதெல்லாம் ப்ளூடூத் கீபோர்ட், மவுஸ் பயன்படுத்துகிறார்கள். லேப்டாப்பில் ப்ளூடூத்தை ஆன் செய்துவிட்டு மவுசை இணைத்துக்கொண்டால் போதும் தூரத்தில் இருந்துகொண்டும் பயன்படுத்தலாம்.


இதெல்லாம் பழைய கதைதான் என்றாலும் இப்போது சொல்லவரும் டிப்ஸ் என்னவென்றால் நமது ஆண்ட்ராய்டு செல்போனையே ப்ளூடூத் மவுசாகவும், கீ போர்டாகவும் பயன்படுத்த முடியும் என்பதுதான். ஒரே செயலி மூலம் உங்கள் செல்போனில் விரலை நகர்த்தினால் உங்கள் கணினி திரையில் குறியீடு நகரும். வேண்டுமென்றால் நீங்கள் டைப்பும் செய்யலாம். உங்கள் லேப்டாப்பில் கீ ஏதேனும் உடைந்துவிட்டாலோ, அல்லது தூரத்தில் இருந்து லேப்டாப்பை பயன்படுத்த நினைத்தாலோ இந்தமுறையை நீங்கள் ட்ரை செய்யலாம்.


என்ன செய்ய வேண்டும்?



  • Remote Mouse என்ற வெப்சைட்டுக்கு சென்று அதனை உங்கள் கணினியிலேயோ அல்லது லேப்டாப்பிலேயோ இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்


> https://www.remotemouse.net/



  • உள்ளே சென்றதும் உங்கள் செல்போனில் Remote Mouse செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்லும். அதன்படி உங்கள் செல்போனிலும் அந்த ஆப்பை இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.

  • அதேபோல உங்களிடம் உள்ள கம்யூட்டரில், மடிக்கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்

  • பின்னர் உங்கள் கம்யூட்டரில் இருக்ககும் Remote Mouseஐ க்ளிக் செய்து செல்போனில் இருக்கும் செயலியையும் இணைத்துக்கொள்ள வேண்டும்





  • இப்போது உங்கள் செல்போனின் திரையில் விரலை வைத்து நகர்த்தினால் கம்யூட்டரோ அல்லது லேப்டாப்பிலோ குறியீடு நகரும். இதன் மூலம் உங்கள் கணினியை கையாளலாம்.

  • இந்த முறையில் நீங்கள் செல்போனை பயன்படுத்த வேண்டுமென்றால் ஒரே வைஃபையில் உங்கள் செல்போன் மற்றும் கம்யூட்டர் இணைந்திருக்க வேண்டும். அல்லது ஒரே ஹாட்ஸ்பாட் முறையில் இணைந்திருக்க வேண்டும்.

  • மவுஸ் மட்டுமின்றி கிபோர்டாகவும் இந்த செயலியை பயன்படுத்தலாம். Remote Mouseல் கொடுக்கப்பட்டிருக்கும் கீபோர்டில் டைப் செய்தால் உங்கள் கணினி திரையில் டைப் ஆகும்.




1. Tech Tips | உஷாரய்யா உஷாரு..! இப்படி சார்ஜ் போட்டா உங்க தகவலெல்லாம் திருடப்படும்!!


2. Tech Tips | இப்படி செய்தால் உங்கள் ட்விட்டர் தப்பிக்கும்..! ஃபாலோ பண்ணவேண்டிய சில டிப்ஸ்!