இப்போதெல்லாம் வீடு கட்டுபவர்கள் பார்த்து பார்த்து செய்யும் விஷயம். சார்ஜிங் பாய்ண்ட். பெட் ரூம் என்றால் கட்டில் போடும் இடத்துக்கு அருகேயே செல்போன் சார்ஜ் போடும் வசதி வேண்டுமென திட்டமிட்டே மின்சார வயர்கள் இழுக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு செல்போனும் நாமும் ஒன்றியே விட்டோம். அதுபோல பொது இடங்களிலும் செல்போன் சார்ஜிங் என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. சிலீப்பர் பேருந்து என்றால் இருக்கை அருகேகூட சார்ஜிங் பாய்ண்டுகள் வந்துவிட்டன. 




இது காலப்போக்கில் எல்லா பேருந்துகளிலும் கூட வரலாம். வீட்டில் இருப்பது போலவே ப்ளக் பாய்ண்ட் மட்டுமே பொது இடங்களில் வைக்கப்பட்ட நிலைமை போய் தற்போது அட்வான்சாக அடுத்து வந்துவிட்டது. இதனை USB wall socket charger என்கிறோம்.


வேறு ஒன்றுமில்லை, இப்போதெல்லாம் செல்போன் சார்ஜ் என்றாலே பட்டை, சி டைப் என யூஎஸ்பி வயர்கள்தான். அப்படி இருக்க எதற்கு சார்ஜர்? நேரடியாக யூஎஸ்பிக்கான இடத்தை பொது இடங்களில் வைத்து விடுகிறார்கள். அதாவது லேப்டாப்பில் சார்ஜ் போடுவது போல, பொது இடங்களில் ஆங்காங்கே யூஎஸ்பிக்கான இடம் இருக்கும். உங்கள் கேபிளை சொருகி சார்ஜ் போட்டுக்கொள்ளலாம். உங்களிடம் சார்ஜர் அடாப்டர் இல்லை என்றாலும் பரவாயில்லை. சார்ஜர் கேபிள் இருந்தாலே போதும், உங்கள் செல்போனுக்கு சார்ஜ் ரெடியாகிவிடும்.


ஆபத்து:


எளிமையாக இருந்தாலும் இதில் அதிக ஆபத்து உள்ளது என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். இதனை புரிந்துகொள்ள அவ்வளவு  கடினமும் இல்லை. நாம் செல்போனில் இருந்து நம் லேப்டாப்புக்கோ, கணினிக்கோ தகவலை பரிமாற்றம் செய்ய என்ன செய்வோம்? சார்ஜிங் கேபிளை சொருகி புகைப்படமோ, வீடியோவோ செல்போனில் இருந்து மாற்றிக்கொள்வோம். இப்போதும் அதேமாதிரி கேபிளைத் தானே சார்ஜ் தேவை என பொது இடங்களில் சொருக இருக்கிறோம். அப்படி என்றால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் தானே? ஆமாம். மிக எளிதாக திருடப்படலாம்.




செல்போன் சார்ஜ் பாய்ண்டாக நினைத்து நீங்கள் சொருகும் யூஎஸ்பி இடத்தில் தகவல்களை திருடும் சார்ப்ட்வேர் இருந்தாலே போதும் உங்கள் செல்போன் கேளரியை முழுமையாக யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். எளிமை, டிஜிட்டல் என நாம் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறினால் அதிலும் ஆபத்துகள் அதிகம் என்கிறது டிஜிட்டல் உலகம். இதில் இருந்தெல்லாம் தப்பிக்க வேண்டுமென்றார் வழக்கம்போல நாம் உஷாராக இருப்பதே ஒரே வழி.


Also Read | TASMAC Holiday: இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை - சரக்குகளை அள்ளிய குடிமகன்கள்..


என்ன செய்யலாம்?



  • பொது இடங்களில் சார்ஜ் போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

  • வேறு வழியில்லை என்பவர்கள், செல்போன் சார்ஜர் அடாப்டருடன் மட்டுமே சார்ஜ் போட்டுக்கொள்ள வேண்டும். நேரடியாக யூஎஸ்பி கேபிள் மூலம் சார்ஜ் போடுவதை தவிர்க்கலாம்

  • அடிக்கடி பயணம் செய்பவர்கள் பவர் பேங்கை பயன்படுத்தலாம். இதனால் பொது இடங்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்கலாம்.