தொழில்நுட்ப சாதனங்களில் முதன்மையானதாகவும் , பயனாளர்களால் எளிதில் புரிந்துக்கொண்டு பயன்படுத்தக்கூடிய செயலியாகவும் இருப்பது வாட்ஸப். இது மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மெட்டா நிறுவனம் வாட்ஸப் செயலியில் சில வசதிகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சோதனை முயற்சியாக இருந்த ஒரு வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் மொபைலில் பதிவிறக்கம் செய்த வாட்ஸப் வசதியை , லேப்டா, கணினி உள்ளிட்ட ஒரு சாதனங்களில் மட்டும் இணைத்துக்கொள்ளும் வசதி இருந்தது. அதனை மொபைலின் இணைய சேவையின் மூலம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட வசதியின் அடிப்படையில் , மொபைல் இல்லாமலும் நாம் இந்த சேவையை பயன்படுத்தமுடியும். ஒரு முறை லேப்டாப், கணினி, ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் வாட்ஸப்பை இணைத்துவிட்டால் , அதனை அந்த சாதனங்களில் உள்ள இணையத்தின் மூலமாகவே பயன்படுத்த முடியும் . இதற்கு மொபைலின் இணைய வசதி தேவையில்லை.ஒரு முறை இணைத்தால் 14 நாட்கள் வரையில் வாட்ஸப் அந்த சாதனங்களில் logout ஆகாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் ஒன்று முதல் நான்கு சாதனங்களில் வாட்ஸப் சேவையை ஒரே நேரத்தில் பெற முடியும். முன்பு ஒரே ஒரு சாதனங்களில் மட்டும் பயன்படுத்த முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பீட்டா வெர்சன் என்னும் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கும் இந்த வசதியை பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இது சோதனை என்பதால் சில ஆரம்பக்கட்ட பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம். அது குறித்த உங்கள் கருத்துக்களை நீங்கள் வாட்ஸப் நிறுவனத்திற்கும் தெரிவிக்கலாம். மொபைலில் வாட்ஸப் வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற வசதிகளை பயன்படுத்துவது போல மற்ற சாதனங்களில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பழைய வெர்சன் வாட்ஸப்பை பயன்படுத்தும் நபர்கள் இந்த புதிய சேவையை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.