இன்ஸ்டாகிராம் இணையத்தில் கிடைக்கும் மிகவும் பிரபலமான சமூக ஊடக பயன்பாடுகளில் ஒன்றாகும். உலகெங்கிலும் நடைமுறையில் உள்ள கோவிட் -19 லாக்டவுனின் காலத்தில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ, ஜூம் வீடியோ காலிங் போல மிகவும் பிரபலமடைந்த ஒரு அம்சமாக இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவை கூறலாம். உலகளாவிய லாக்டவுனின் போது லைவ் வீடியோக்களின் பயன்பாடானது 60 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒருவேளை நீங்களும் ஒரு இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால்? அல்லது உங்களின் நண்பர் ஒருவரின் லைவ் வீடியோவில் தசேர விரும்புகிறீர்கள் என்றால்? ஆனால் இதெல்லாம் எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியாது என்றால் கவலையை விடுங்கள். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். உங்கள் நண்பர்களுடன் லைவ் வீடியோவைத் தொடங்க இன்ஸ்டாகிராமில் இரண்டு வழிகள் உள்ளன. உங்கள் லைவ் வீடியோவில் சேர நண்பரை இன்வைட் செய்யலாம் அல்லது உங்கள் நண்பரின் லைவ் வீடியோவில் நீங்கள் இணைந்து கொள்ளலாம் அதாவது உங்களையும் சேர்த்துகொள்ளுக்குமாறு லைவ் வீடியோ செய்யும் உங்கள் நண்பரை கேட்கலாம். உங்கள் லைவ் வீடியோவில் ஜாயின் ஆக சொல்லி உங்கள் நண்பரை அழைப்பது எப்படி?
- உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும்.
- ஆப்ஷன்ஸ் மெனுவைத் திறக்க உங்கள் ஃபீடின் மேல் இடது மூலையில் டேப் செய்யவும்.
- ‘லைவ்’ பட்டனை கண்டுபிடித்து அதை அழுத்தவும்.
- இதை செய்ய உங்களை ஹோஸ்ட் ஆக மாற்றி ஒரு லைவ் வீடியோவைத் தொடங்கப்படும்.
- இதற்குப் பிறகு, இரண்டு ஸ்மைலி முகங்களுடன் உள்ள பட்டனை அழுத்தவும்.
- உங்கள் லைவ் வீடியோவைப் பார்க்கும் நபர்களின் பட்டியலைப் பார்த்து, இணைய விரும்பும் நண்பரை ஜாயின் செய்ய சொல்லி அழைக்கவும்.
- உங்கள் நண்பர் உங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அது ஸ்பிலிட்-ஸ்க்ரீன் வியூவாக தோன்றும்.
- குறிப்பிட்ட நண்பரை லைவ்வில் இருந்து அகற்ற, அவர்களின் ஸ்பிலிட்-ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள ‘x’ பட்டனை கிளிக் செய்யவும், அவ்வளவுதான்.
இன்ஸ்டாகிராம் சமீபத்தில் லைவ்ஸ்ட்ரீம்களை திட்டமிட்டு முன்கூட்டியே ஷெட்யூல் செய்யும் திறனை அறிமுகப்படுத்தியது. லைவ் ஷெட்யூலிங் எனப்படும், இந்த அம்சம் உங்கள் ஸ்ட்ரீமை 90 நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிடலாம் மற்றும் பாலோயர்ஸ்களுக்கு ட்யூன் செய்ய ரிமைண்டர்களை அமைக்கலாம். இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் வழியாக நேரடி வீடியோவைத் தொடங்கும் வசதியை வழங்குகிறது. நேரலை திட்டமிடல் மூலம், படைப்பாளிகள் 90 நாட்களுக்கு முன்பே விளம்பரப்படுத்தி பரபரப்பை கூட்ட முடியும், மேலும் ஒரு பெரிய அறிவிப்பு, வரவிருக்கும் நிகழ்வு அல்லது ஒரு வெளியீட்டு விழாவைக் கூட பின்தொடர்பவர்களை எதிரார்ப்புடன் காத்திருந்து பார்க்க வைக்க முடியும். பின்தொடர்பவர்கள் இடுகை, விளக்கம் மற்றும் நேரடி இணைப்பைக் கொண்ட அறிவிப்பைப் பார்க்க முடியும். லைவ் ஷெட்யூல் மூலம், பயனாளர்கள் லைவ் தொடங்கும் முன் கவுண்டவுன் ஓடுவது போன்று செட் செய்யலாம். இன்ஸ்டாகிராமில் லைவ் ஷெட்யூல் செய்வது எப்படி:
- Instagram ஆப்பை திறந்து, கேமராவைத் திறக்க இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.
- கேமரா திறந்ததும், கீழ் விளிம்பிலிருந்து வலதுபுறமாக ஸ்வைப் செய்து, லைவ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Schedule எனப்படும் ஆப்ஷன் திரையின் வலது பக்கத்தில் காட்டப்படும்.
- ஷெட்யூலை தேர்ந்தெடுத்து நிகழ்வின் பெயரை ‘வீடியோ டைட்டில்'-இல் உள்ளிடவும்.
- தொடக்க நேரத்தைக் கிளிக் செய்து, திட்டமிடலுக்கு எதிர்காலத்தில் ஒரு தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- 'ஷெட்யூல் லைவ் விடியோ' என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது பயனர்கள் திட்டமிடப்பட்ட நேரலையைப் பாலோயர்ஸ்களுக்கான பதிவாக பகிரலாம், நேரலை தொடங்குவதற்கு முன் பாலோயர்ஸ் ரிமைண்டர்களை நோடிபிகேஷனாக பெறுவார்கள்.