சக பயணி ஒருவருக்கு சரியான நேரத்தில் உதவியதற்காக மருத்துவராக இருந்து மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் டாக்டர் பகவத் காரத் செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டுதலை பெற்றார். நேற்றிரவு டெல்லியில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கராத், சக விமானி ஒருவர் மயக்கம் வருகிறது என்று கூறிய உடன் அமைச்சர் எழுந்து வந்து பயணிக்கு உதவினார்.






புகைப்படத்தில் நோயாளி ஒரு வரிசை இருக்கைக்கு குறுக்கே நீண்டு படுத்திருக்கிறார், அமைச்சர் அவரின் உடல் நிலையை சோதனை செய்வதற்காக பார்த்துக் கொண்டிருப்பதையும் புகைப்படம் காட்டுகிறது. "நோயாளிக்கு அதிக அளவில் வியர்த்துள்ளது, மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்தது," என்று திரு பகவத் காரத் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்ட பிறகு பயணி உடல்நிலை நன்றாக இருப்பதாக உணர்ந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த ட்விட்டர் பதிவை இண்டிகோ ஏர்லைன்ஸ் ரீட்வீட் செய்து உறுதிபடுத்திருந்தது. அதனை ரீட்வீட் செய்து பிரதமர் மோடி சரியான நேரத்தில் தலையீடு செய்ததற்காக ஒன்றிய அமைச்சரை பாராட்டியுள்ளார். "எப்பொழுதும் இதயப்பூர்வமாக ஒரு மருத்துவர்! எனது சக ஊழியர் @DrBhagwatKarad இன் சிறந்த செயல்" என்று ட்வீட் செய்துள்ளார்.






அமைச்சரின் செய்கையைப் பாராட்டி, IndiGo செய்த ட்வீட்டில், "இடைவிடாமல் தனது கடமைகளைச் செய்ததற்காக MoS-க்கு எங்கள் மனமார்ந்த நன்றியும் உளப்பூர்வமான பாராட்டுகளும்! @DrBhagwatKarad சக பயணிகளுக்கு உதவும் உங்கள் தன்னார்வ உணர்வு எப்போதும் ஊக்கமளிக்கிறது." என்று எழுதியிருந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர் பகவத் காரத் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். அவர் அவுரங்காபாத்தில் ஒரு மருத்துவமனை வைத்திருக்கிறார் மற்றும் பல மருத்துவ பதவிகளில் பணியாற்றியுள்ளார். அவர் மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவுரங்காபாத் மேயராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.