ஐபோன் பிரியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய டாஸ்க் என்னவென்றால் அதன் டேட்டாவை அழிப்பதுதான். உங்கள் ஐபோனில் இருந்து தரவை நீக்கும் போது, உங்கள் சாதனத்திலிருந்து எல்லா தரவையும் அழித்துவிட்டீர்கள் என்று நீங்கள் நம்பினாலும் அது இன்னும் பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஐபோனை விற்க அல்லது மாற்ற விரும்பினால் உங்கள் தரவுகளை முழுமையாக நீக்கிவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
உங்கள் iOS சாதனத்திலிருந்து தரவை நிரந்தரமாக அகற்ற ஆப்பிள் இரண்டு வழிகள் இருக்கிறது.
- Mac அல்லது Windows PC ஐப் பயன்படுத்தி உங்கள் iPhone அல்லது iPad இலிருந்து உங்கள் தரவை அழிக்கலாம்.
- உங்கள் iPhone இல் உள்ள Settings விருப்பத்திலிருந்து எல்லா தரவையும் அழிக்கலாம்.
Settings வசதி மூலம் ஐபோன் தரவுகளை அழிப்பது எப்படி ?
- உங்கள் ஐபோனில் உள்ள Settings வசதிக்கு செல்லவும்.
- அதில் General என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்கள் ஐபோனில் Transfer or Reset என்பதைக் கிளிக் செய்யவும்.
- Erase All Content and Setting sஎன்பதைத் தட்டவும், அவ்வளவுதான் உங்கள் ஐபோனின் தகவல்கள் அழிந்துவிட்டன.
Mac அல்லது Windows PC ஐப் பயன்படுத்தி ஐபோன் தரவை நீக்குவது எப்படி ?
ஒருவேளை settings முறையில் உங்களால் அனைத்து தரவையும் நீக்க முடியவில்லை என்றால் Mac அல்லது Windows PC ஐப் பயன்படுத்தி iPhone சேமிப்பகத்திலிருந்து தரவை நிரந்தரமாக நீக்கலாம்.
கேபிள் வழியாக உங்கள் ஐபோனை உங்கள் கணினியுடன் இணைத்து பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:
- உங்கள் மேக்கில், Finder sidebar ஐ கிளிக் செய்யவும் .
- இப்போது உங்கள் ஐபோனைத் தேர்ந்தெடுக்கவும்
- விண்டோவின் மேலே உள்ள General என்னும் வசதியை க்ளிக் செய்யவும்.
- Restore iPhone என்னும் வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் மொபைலின் டேட்டா அழிந்துவிடும்.
நீங்கள் Windows PC உடன் iPhone ஐ இணைத்திருந்தால் :
- iTunes செயலியில் கிளிக் செய்யவும்
- இப்போது iTunes சாளரத்தின் மேல் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ள iPhone பொத்தானைக் கிளிக் செய்யவும்
- இப்போது Summary என்பதை க்ளிக் செய்யுங்கள்
- அதன் பிறகு Restore iPhone என்னும் வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள்.