கொரோனா தொற்று உலகம் முழுக்க ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், அடுத்ததாக ஒமிக்ரான் வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகியுள்ளது. அதுமட்டுமின்றி எங்கு சென்றாலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களும் கேட்கப்படுகின்றன.
இந்நிலையில், சர்வதேச பயணத்திற்கான கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை மினி ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று paytm அறிவித்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டிற்கும் பயணச் சான்றிதழ்கள் இப்போது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன், நாடு சார்ந்த கோவிட்-19 வழிகாட்டுதல்களைச் சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்," Paytm தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட Paytm-இன் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பான் பயனர்களுக்கு ஸ்லாட்டுகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க உதவுகிறது. பயனர்கள் PIN குறியீடுகள் அல்லது மாவட்டங்களின் அடிப்படையில் ஸ்லாட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம்.
மேலும் இதில் தடுப்பூசியின் வகை மற்றும் அதற்கு விதிக்கப்படும் கட்டணம் போன்ற அனைத்து வகையான தடுப்பூசி தொடர்பான தகவல்களையும் பெறலாம்.
இந்தியாவில் உள்ள 1,400 நகரங்களில் உள்ள பயனர்களால் இதுவரை 32 லட்சத்திற்கும் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 14 லட்சத்திற்கும் அதிகமான சான்றிதழ்களைப் பதிவிறக்க பயனர்களுக்கு இது உதவியுள்ளது.
Paytm அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் பயனர்களுக்கு வசதியைக் கொண்டுவர நாங்கள் எப்போதும் முயற்சி செய்கிறோம், மேலும் சர்வதேச பயணச் சான்றிதழ்களைப் பதிவிறக்குவதற்கான சமீபத்திய அம்சம் மற்றொரு படியாகும். தொற்றுநோயிலிருந்து நமது நாடு பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் தேவையான அம்சங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் தொடருவோம்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி.. கோவை மருத்துவமனையில் அனுமதி..
யூடியூபர் மாரிதாஸுக்கு, 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு
Vikram Covid Positive | நடிகர் விக்ரமுக்கு உறுதியானது கொரோனா தொற்று..
Cryptocurrency: எங்கும் பேசப்படும் கிரிப்டோகரன்சி.. IMF கீதா கோபிநாத் சொல்வது என்ன?