இரண்டு பில்லியனுக்கு அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள சமூக வலைத்தள செயலி வாட்ஸ் அப்.  மெட்டா நிறுவனத்திற்கு கீழ் இயங்கு வாட்ஸ் அப் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படித்தான் வாட்ஸப்பில் உள்ள ஸ்டிக்கர் வசதியும். செய்தியாக மட்டுமே தகவல்களை பரிமாராமல் , சில சுவாரஸ்ய ஸ்டிக்கர்ஸுடனும் நாம் பதில்களை அனுப்பலாம். உதாராணத்திற்கு சிலர் வடிவேலுவின்  ரியாக்ஸன்களை நமக்கு ஸ்டிக்கெர்ஸாக அனுப்புவார்கள். அதே போல நமது புகைப்படங்களையும் ஸ்டிக்கராக அனுப்ப முடியும் . இது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் அதனை இந்த தொகுப்பு வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.



உங்கள் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்றுவது எப்படி?


படி 1: உங்கள் கணினியில் வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.


படி 2: நீங்கள் ஸ்டிக்கரைப் பகிர விரும்பும் நபரின்  chat ஐ திறக்கவும்.


படி 3:  அதில் இடது பக்கம் , கீழாக  உள்ள பேப்பர் கிளிப் ஐகானைக் கிளிக் செய்யவும்.


படி 4: இப்போது, ​​புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரும் வசதியின்  மேல் தோன்றும் ஸ்டிக்கர் விருப்பத்தை கிளிக் செய்யவும்.


படி 5: நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற விரும்பும் புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


படி 6: நீங்கள் அதைச் செய்தவுடன், அனைத்து எடிட்டிங் கருவிகளுடன் ஒரு புதிய  ஸ்கிரீன் திறக்கும். படத்தில்  வேண்டிய எடிட்டிங்கை செய்துக்கொள்ளலாம்.


படி 7: அதன் பிறகு send வசதியை க்ளிக் செய்து நீங்கள் புகைப்படத்தை ஸ்டிக்கராக அனுப்பலாம்.


நீங்கள் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்ட  ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ரசிகராக இருந்தால், அதன் சமீபத்திய நான்காவது சீசனை கொண்டாடும் வகையில்  Android மற்றும் iOS பயனாளருக்கான  Stranger Things ஸ்டிக்கர் பேக் வெளியாகியுள்ளது. அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் . அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




Stranger Things ஸ்டிக்கர் பேக் பெறுவது எப்படி ?


படி 1: முதலில் WhatsApp செயலியை திறந்து , அதில் யாரவது ஒரு நண்பரின் chat window ஐ திறந்துக்கொள்ள வேண்டும்


படி 2:  வலது மூலையில் இருக்கும்  sticker வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள். 


படி 3: கீழே உள்ள  sticker icon ஐ கிளிக் செய்ய வேண்டும் . பிறகு ஸ்டிக்கர் பார் மேலே தோன்றும் ‘Plus’ என்னும்  வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள்.


படி 4: அதில் தோன்றும் Stranger Things sticker pack ஐ க்ளிக் செய்யுங்கள் 


படி 5: அதன் அருகே பதிவிறக்கம் செய்வதற்கான வசதி கொடுக்கப்படிருக்கும். அதனை க்ளிக் செய்தால் , டவுண்ட்லோட் செய்யப்பட்ட Stranger Things ஸ்டிக்கர்ஸ் , உங்கள் ஸ்டிக்கர் பெட்டிக்குள் வந்துவிடும்.