பிரியங்கா சோப்ராவின் ரசிகரான சிறுவன் ஒருவன், டிக் டாக் வீடியோவில் ப்ரியங்காவை காதலிப்பதாக தனது தாயிடம் கூறுகிறான். இளம் ரசிகரின் வீடியோவைப் பிரியங்கா பகிர்ந்துள்ளார் . இந்த விடியோவை பலரும் பார்த்து சிரிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரியங்காவுக்கு சமூக ஊடகங்களில் ஒரு தீவிர ரசிகர் தளம் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை அவர் இளம் ரசிகர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பிரியங்காவின் பழைய புகைப்படத்திற்கு குழந்தை எதிர்வினையாற்றுவதைக் காண முடிந்தது.
பிரியங்காவின் புகைப்படத்தைப் பார்த்து, அந்த சிறுவன் "நான் ப்ரியங்காவை காதலிக்கிறேன்" என்று தனது தாயாரிடம் கூறினான். அவரது தாயார் சிரிக்கத் தொடங்கிய போது, அவன் வெட்கப்பட்டு தாயை கட்டிப்பிடித்தான். பின் 'ஏன்' என்று அவன் தாய் கேட்டபோது, " பிரியங்கா சோப்ரா அழகாக இருப்பதால்" என்று சிறுவன் கூறினான்.
அந்த வீடியோவை காண Stories • InstagramStories • Instagram" rel="dofollow">Stories • InstagramStories • Instagram
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா, அந்த இளம் ரசிகருக்கு பதிலளித்தார், "என் நண்பரே பெஸ்ட் டேஸ்ட்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு தொடருக்கான படப்பிடிப்பை முடித்தார். அந்த தொடர் அமேசான் பிரைமில் வெளியாகும் என கூறப்படுகிறது.