ஆஃபீஸ், தேவதை போன்ற பல சீரியல்களிலும் கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களிலும் நடித்தவருமான நடிகை ஜீவிதா ஒரு பேட்டி அளித்துள்ளார். சினிமாவில் இருக்கும் பெண்களை கேவலமான தொழில் செய்வார்கள் என்று நினைக்காதீர்கள் என்று ஜீவிதா கூறியுள்ளார்.


அப்பா எம்ஜிஆர் ரசிகர்


என் அப்பா எம்ஜிஆர் ரசிகர். சாமி கும்பிடாத எம்ஜிஆரை வணங்கு என்பார். அப்படியொரு எம்ஜிஆர் வெறியர் அவர். என் சொந்த ஊர் நாமகிரிபேட்டை. எனக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது ஆசை. நான் 2013ல் ஏவிஎம் ஸ்டூடியோவின் கதவை தட்டினேன். ஜெயா டிவியின் மனதில் உறுதி வேண்டும் சீரியலின் 150வது எபிசோடில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நடனம் தான் என் கணவு என்றாலும் நடிப்பு எனக்கு தானாக வந்தது. ஒரு சூட்டிங் பார்க்கப்போன போது சதாசிவம் சார் சூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார். அவரிடம் நேரே போய் வாய்ப்பு கேட்டேன். அவர் நடித்துக் காட்டச் சொன்னார். செய்தேன். யு ஆர் செலக்டட் என்று சொல்லிவிட்டார். நடித்தேன். அப்புறம் வைராக்கியம் சீரியலில் பட்டாக்கத்தி பத்மினி ரோல் வந்தது. அப்புறம் ஆஃபீஸ் சீரியல் வந்தது. அதில் நான் வில்லியாக நடித்தேன். முதலில் பிரம்மாவிடம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேன். அப்புறம் தான் ஒப்புக்கொண்டேன். 


வீட்டில் கடும் எதிர்ப்பு:


நான் நடிகையானதற்குப் பின்னர் என் வீட்டில் பயங்கரமாக திட்டினார்கள். என் பாட்டியெல்லாம் உன்னை யாராவது ஏமாத்தி கொன்று கூவத்தில் போட்டுருவாங்க என்றார்கள். ஆனால் நான் எப்போதும் நினைத்ததை சாதிப்பேன். நான் சின்னதில் இருந்தே குறும்புக்காரி, சேட்டைக்காரி. அதனால வீட்டில் பேசி கன்வீன்ஸ் செய்தேன். குடும்பப் பெயர் கெடாமல் நடிப்பேன் என்று சொல்லி வந்தேன். அதை இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.


ஏன் டூ பீஸ் இருந்தால் தான் ஒத்துப்பீங்களா?


எனக்கு சினிமாவில் நிறைய சான்ஸ் வந்திருக்கு. ஆனால் நடித்ததை விட இழந்தது தான் அதிகம். காரணம் நான் நடிக்க வரவேண்டும் என்று எண்ணவில்லை. நடனம் தான் எனது பேஸன். ஒரு டேன்ஸ் ஸ்கூல் உருவாக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. என் நடன ஆசையை தெரிந்து கொண்டே எனக்கு வலை விரிக்க முயன்றார்கள். உங்களுக்கு நமீதாவுக்கு தர ரோல் தருகிறோம். அதில் நீங்கள் டூ பீஸில் நடிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் எனக்குப் புரியவில்லை. ஏன் டூ பீஸ் இருந்தால் தான் என்னை நடனம் தெரிந்தவர்களாக ஒப்புக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. நான் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என நினைப்பேன். கேட்டதில்லை. நமீதா ரோல் தரேன், ஆனால் சம்பளம் 5000 என்பார்கள். ஏன் நமீதா ரோல் கொடுத்து நமீதா போல் ஆடை அணிந்து ஆடினால் அதே சம்பளம் கொடுக்கலாம் தானே. அப்போதான் தோணும் ஏதோ வலை விரிக்கிறார்கள் என்று.




கடைகுட்டி சிங்கம் பட அனுபவம்..


கடைகுட்டி சிங்கம் படத்தின் அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷம். சத்யராஜை சாரை நேரில் பார்த்து பிரம்மித்துப் போனேன். கார்த்தி சார் ஏன் நீங்க நிறைய படங்கள் பண்ணவில்லை என்று கேட்டார். அவ்வளவு பெரிய நபர் அத்தனை எளிமையாக நடந்து கொண்டது ஆச்சர்யமாக இருந்தது. நல்ல டீம் நல்ல நபர்களும் சினிமாவில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு அந்தப் படத்தின் வாயிலாக வந்தது.


ஷாக் ஆயிட்டேன் அழுகை வந்தது..


நான் ஒரு படத்தில் இரண்டாவது லீடாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது அந்த இயக்குநர் உனக்கு முக்கியமான வேடம் மா. ஆனால் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும்னு சொன்னார். நான் என்ன சார் என்று கேட்டேன். முதலில் நான் வருவேன். அப்புறம் கேமராமேன் வருவார். அப்புறம் நடிகர் வருவார். அப்புறம் தயாரிப்பாளர் வருவார் என்றார். எனக்கு அழுகை வந்தது. ஆனால் அழுதால் நான் தோற்றதாகிவிடும் என்று மறுத்துவிட்டு வந்தேன். சினிமாவில் சில பெண்கள் அட்ஜெட் செய்வதாலேயே எல்லோரிடமும் அதை எதிர்பார்க்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து நோ சொன்னால் கவுரவமாக பிழைக்கலாம்.


இவ்வாறு ஜீவிதா பேசினார்.