வாட்ஸ் அப் மூலம் வங்கி கணக்கின் இருப்பை தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்த முழு தகவலை பார்க்கலாம். 


வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துபவர்கள் உடனடி செய்தியிடல் சேவை செயலியைப் பயன்படுத்தி பணம் அனுப்புதல் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்த்தல் போன்ற நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு பணப் பரிவர்த்தனைகளை இயக்க, WhatsApp Payments UPI பயன்படுத்துகிறது. இது இந்தியாவின் பெரும்பாலான முக்கிய வங்கிகளால் ஆதரிக்கப்படும் தேசிய கட்டண முறை ஆகும்.


இது பீட்டா சோதனையின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த அம்சம் நவம்பர் 2020இல் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. இந்த சேவைக்காக 227க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் இணைந்து நிகழ்நேர கட்டண முறையை வழங்குகிறது வாட்ஸ்அப்.


இதன்மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். வாட்ஸ் அப் மூலம் இரண்டு வழிகளில் உங்கள் கணக்கை சரிபார்க்க முடியும். ஒன்று செட்டிங்ஸ் மூலம் சரிபார்க்கலாம். மற்றொன்று பணம் அனுப்பும்போது கட்டண திரையில் பார்க்கலாம்.


உங்கள் வங்கி கணக்கை வாட்ஸ் அப் மூலம் கீழ்காணும் முறையில் சரிபார்த்து கொள்ளலாம். 


‛மற்றவர்களின் வேதனையில் இன்பம் காணாதீர்’ - ப.சிதம்பரத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்!


செட்டிங்ஸில் உங்கள் கணக்கை சரிப்பார்க்க இதை பயன்படுத்தவும்:


1)உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
2)உங்களிடம் ஆண்ட்ராய்டு இருந்தால், More Options-ஐ தேர்வு செய்யவேண்டும். 
3)உங்களிடம் ஐபோன் இருந்தால், செட்டிங்ஸை தேர்வு செய்ய வேண்டும்
4)கட்டண முறைகளின் கீழ், தொடர்புடைய வங்கிக் கணக்கைத் கிளிக் செய்யவும்
5)இங்கே, கணக்கு இருப்பைக் காண்க என்பதை தேர்வு செய்ய வேண்டும். 
6)உங்களின் யுபிஐ பின்னை பதிவிடவும்


பணம் அனுப்பும் போது அக்கவுன்ட் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? வேறொரு கணக்கிற்குப் பணத்தை மாற்றும் போது உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்:


1) கட்டண அறிவிப்புத் திரையில் இருந்து உங்களுக்கு விருப்பமான கட்டண விருப்பத்தைத் தேர்வு செய்யவும்
2)‘கணக்கு இருப்பைக் காண்க’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3) உங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் பல வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால் தொடர்புடைய வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
4)உங்கள் UPI பின்னை உள்ளிடவும்.


 


இனி வாட்ஸ் ஆப், வெறும் சாட் சாதனம் அல்ல. உங்கள் பரிவர்த்தனைகளை பட்டியலிடவும் உதவலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண