Paytm-இன் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்தால் ரூ.900 கேஷ்பேக் வரையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு பணம் செலுத்துவது மற்றும் புக்கிங் செய்த சிலிண்டர் எந்த இடத்தில் உள்ளது என்பது போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கு வசதியாக வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே ஆட்டோமேட்டட் ரீஃபில் மூலம் நினைவூட்டுதல் போன்ற புதிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.


இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதி சேவைத் தளம் மற்றும் ஃபிண்டெக் நிறுவனமான பேடிஎம், LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான அணுகுமுறையை அதன் தளத்தில் புதுப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நாம் புக்கிங் செய்யும் போது, எளிதாக முன்பதிவு செய்வது, அதற்கான பணம் செலுத்துவது மற்றும் புக்கிங் செய்த சிலிண்டர் எந்த இடத்தில் உள்ளது என்பது போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு வசதியாக வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தானியங்கி நிரப்புதல் மூலம் நினைவூட்டுதல் (automated refill reminders) அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இதன்  செயல்பாடுகள் அனைத்தும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.


தற்போது தங்களக்கு தேவையான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் ஐவிஆர்எஸ் (Interactive voice response), missed calls வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யமுடியும். பின்னர் அதற்கான பணத்தினை  ஆன்லைன் ஃபிண்டெக் இயங்குதளத்தின் மூலம் எளிதாக செலுத்த முடியும். இந்நிலையில் தான் பயனர்களின் வசதிக்காக மேலும் புதிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி சிலிண்டர் முன்பதிவு செய்திருந்தாலும், அதற்குரிய கட்டணத்தை பல மணி நேரங்களுக்குப்பிறகு கூட  Paytm மூலம் பணத்தினை செலுத்திக்கொள்ளும் வசதிகள் உள்ளது. மேலும்  நீங்கள் முதல் முறையாக Paytm மூலம் LPG செய்கிறீர்கள் என்றால், அவர்களுக்கு சிலிண்டர் முன்பதிவில் 3 முறை ரூ. 900 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்யும் போது ஒவ்வொரு முறையும் பயனர்கள் அதற்கான புள்ளிகளை பெற முடியும். இதனை wallet balance மற்றும் பிரபலமான பிராண்டுகளில் தள்ளுபடி வவுச்சர்களிலிந்து பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக  Indane, HP மற்றும் bharatgas ஆகிய LPG சிலிண்டர்களின் முன்பதிவுக்கு இந்த சலுகைப்பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Paytm Postpaid இல் சேருவதன் மூலம் சிலிண்டர் முன்பதிவுக்கு வாடிக்கையாளர்களுக்கு பின்னர் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.





இந்நிலையில் வாடிக்கையாளர்கள் இந்த Paytm னைப்பயன்படுத்தி எப்படி பணம் எடுத்துக்கொள்வது என்பது பற்றித்தெரிந்து கொள்வோம்..


முதலில்,  உங்களது தொலைப்பேசியில் Paytm பயன்பாடு இல்லை என்றால் முதலில் Google play storeன் மூலம் முதலில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.


பின்னர் book gas cyclinder என்பதனை ஒபன் செய்துக்கொள்ள வேண்டும்.


பிறகு, நாம் எங்கிருந்து சிலிண்டர்களை பெற்றுவருகிறோமோ? அந்த அலுவலகத்தினைத்தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நாம் பதிவு செய்துள்ள மொபைல் எண், எல்பிஜி ஐடி, நுகர்வோர் எண் ஆகியவற்றை பதிவு செய்து Paytm ல் எளிதில் சிலிண்டர்களை புக் செய்துக்கொள்ளலாம்.


இறுதியாக பதிவு செய்யப்பட்ட எரிவாயு நிறுவனத்தால் நாம் புக்கிங் செய்த முகவரிக்கு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது.


முன்னதாக இதன் மூலம் புக்கிங் செய்யும் போது, நம்முடைய சிலிண்டர் எந்த இடத்தில் உள்ளது, எவ்வளவு தொகை, எப்பொழுது மீண்டும் புக்கிங் செய்ய வேண்டும் என்பது போன்ற புதிய  அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.