இந்திய அளவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் விமான நிலையங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய சிவில் ஏவியேஷன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சில விமனநிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சரிவர எடுக்கப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் மாஸ்க் அணிதல், முறையான சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற அனைத்தையும் மக்கள் கடைபிடிப்பதை விமனநிலையங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் டெல்லி விமனநிலையத்தை பொறுத்தவரை தரையிறங்கும் பயணிகள் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும், கொரோனாவிற்கான அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை கூறியுள்ளது.

Kind attention to all the domestic flyers arriving to #DelhiAirport pic.twitter.com/nnsh1AFDCB
— Delhi Airport (@DelhiAirport) March 31, 2021

மேலும் உத்ரகாந்த் மாநிலத்திற்கு விமானம் மூலம் வரும் தமிழகம், கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கட்டாயம் "கொரோனா இல்லை" என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

pic.twitter.com/3Iw52Wvxjz
— DGCA (@DGCAIndia) March 30, 2021

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் விமனநிலையங்களில் கட்டுப்பாடுகளும் அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.