ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் தங்களது சாதனங்களின் இயங்குதளத்தை புதுப்பிக்க வேண்டும் என CERT -in (CERT-Indian Computer Emergency Response Team) இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுஅவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐபோன் மற்றும் ஐபேடின் முந்தைய புதிப்பிப்புகளில் உள்ள சில பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்த அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது . அரசுக்கு சொந்தமான CERT -in குழு, ஐபோன் மற்றும் ஐபேடின் முந்த அப்டேட்டில் நினைவக திறன் பாதிப்பு அதாவது memory corruption vulnerability என்ற ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் ரிமோட் அட்டாக்கர்ஸ் ஐபோன் மற்றும் ஐபேடின் நினைவகத்திற்குள் நுழைந்து தகவல் திருட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக CERT -in தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு அனைத்து ஐபோன் பயனாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் 6 மற்றும் அதற்கு பிறகான மொபைல் போன்கள் , ஐந்தாம் தலைமுறை மற்றும் அதற்கு பிறகு வெளியான சாதனங்கள், ஐபாட் புரோ மாடல்கள், ஐபாட் ஏர் 2 , ஐபோன் மினி , ஐபேட் டை ( 7வது தலைமுறை ) , மேக் பிக் சர் ( macOS Big Sur)போன்றவை நினைவக திறன் பாதிப்பு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
ரிமோட் அட்டாக்கர்ஸால் தன்னிச்சையான குறியீட்டை (malicious code ) செயல்படுத்துவதற்கும், நினைவகத்தில் உள்ள தகவல்களை திருடுவதற்கும் இந்த பிரச்சனை ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.ஐபோன் மற்றும் ஐபேடில் போதுமான நினைவக திறன் இல்லாத பட்சத்தில் , IOMobileFrameBuffer பகுதியில் இந்த பாதிப்பு ஏற்படுவதாக CERT -in தெரிவித்துள்ளது. Kernel privileges ( கணினி மற்றும் மொபைலின் அனைத்து வன்பொருள் மற்றும் நினைவகத்திற்கும் குறியீட்டை நேரடியாக அணுக அனுமதிக்கும் செயலாக்க முறை) மூலம் ரிமோட் அட்டாக்கர்ஸ் தேவையான பாதிப்பை ஏற்படுத்தவும் இது வழிவகை செய்கிறது. இதிலிருந்து ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்கள் தப்பிக்க ஒரே வழி , சமீபத்திய iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 அப்டேட் செய்வதுதான். உங்கள் மொபைல் மற்றும் ஐபேடில் Settings > General > Software Update என்ற வசதியின் மூலம் இந்த 14.7.1 இயங்குதள பதிப்பினை புதிப்பித்துக்கொள்ளலாம்.