பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (google ) தனது அடுத்த பிக்சல் மொபைல் போனான பிக்சல் 6 சீரிஸை  விரைவில் சந்தைப்படுத்தவுள்ளது. இந்நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மடிக்கும் மொபைல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ‘பாஸ்போர்ட்(passport) ” என்ற பெயரில்  தனது ஃபோல்டிங் மொபைலை சந்தைப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது ஜம்போ ஜாக் ( jambojack ) என்ற பெயரிலான மடிக்கும் பெயரிலான மடிக்கும் பொபைலை உருவாக்கி வருவதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வெளியான பாஸ்போர்ட்  மடிக்கும் மொபைல்போனை ஒப்பிடுகையில்  ஜம்போஜாக் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது. இது அந்த மொபைலில் இருந்து மாறுபட்ட ஒன்றாகவோ அல்லது அதிலிருந்து புதிப்பிக்கப்பட்ட ஒன்றாகவோ இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் முன்னதாக வெளியான தகவலின் அடிப்படையில் google folding mobile  ஆனது android 12.1 இயங்குதளத்தை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.






 கூகுளின் jambojack மடிக்கும் மொபைல் தோற்றத்தில் samsung நிறுவனத்தின் Z Flip  மொபைல்போன்களை போன்று உள்ளது.இந்த மொபைலை இந்த ஆண்டு இறுதியில் கூகுள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் கூகுளின் pixel event இல்  jambojack  மொபைல்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. தற்போது இவ்வகை மாடல்கள் prototype stage என அழைக்ககூடிய சோதனை முயற்சியில் உள்ளன. இந்த மொபைல்போன்களையும் கூகுள் ‘பிக்சல்’ மொபைல்போன் வரிசையில் அறிமுகப்படுத்தவுள்ளது. google pixel jumbopack  என்ற பெயரில் அறிமுகமாகலாம். திறந்த நிலை(  open) , மூடிய நிலை (close) , பாதி திறந்த நிலை (half open) , பின்பக்கமாக மடங்கிய நிலை (flip) என நான்கு வகைகளில் இந்த மொபைலை பயனாளர்கள் பயன்படுத்தமுடியும்.




மேலும் ஒவ்வொரு ட்ஸ்பிளேவுக்கும் ஏற்ற மாதிரியான திரை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மடக்குவதற்கு ஏற்ப LTPO OLED திரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டே ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தில் கூகுளின் பாஸ்போட் மொபைல்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூகுள் அதனை கூகுள் சில காரணங்களால் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் ஜம்போஜாக் மொபைலானது விரைவில் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை கலக்க போகிறது. முன்னதாக சாம்சங், ஹுவாய், சியோமி போன்ற நிறுவனங்கள் தங்களில் ஃபோல்டிங் மொபைலை சந்தைப்படுத்தியுள்ளன. இதில் சாம்சங் வெற்றியும் அடைந்துள்ளது. அதேபோல OPPO, VIVO போன்ற நிறுவனங்களும் விரைவில்  தங்கள் மடிக்கும் மொபைலை  இந்தியாவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.