கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக டி.ஆர்.பி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பயத்தில் இருந்தனர். இந்த நிலையில் கோவிந்தராஜனின் மகனுக்கு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷின் தொலைபேசியில் இருந்து உங்கள் தகப்பனார் இறந்துவிட்டார் என்று தகவல் கூறியதாக கூறப்படுகிறது.
பின் அதன்பேரில் சென்னையில் இருந்து விரைந்து வந்த மகன் இறந்தவரின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் அறிந்து அதை சென்று பார்த்தபோது அவர் உடல் முழுவதும் காயங்கள் கண்ணம் காது போன்ற பல இடங்களில் காயம் இருந்துள்ளது இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தராஜன் உறவினர்கள் மற்றும் பாமகவினர்கள் இந்த கொலையில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி.ரமேஷ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது புகார் கொடுக்கப்பட்டவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளதாகவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து மேலும் பிரேத பரிசோதனைக்கு குழுவாக டாக்டர்களை அமைத்து அதுவும் வெளிமாவட்ட மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனையின் போது உறவினர்கள் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர், இறந்த நபர் பாமக நிர்வாகி என்பதால் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடலூரில் மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என பாமகவினர் தெரிவித்தனர்.
பண்ருட்டி முந்திரி தொழிற்சாலையில் ஊழியர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.