மேக்கப் இல்லாமல் டயட் மூலம் முகத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்வதற்கு தினமும் காய்கறிகளை ஜூஸாக குடித்துவந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ பட நாயகி  ஸ்ருதிகா..


“கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும்“ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர்தான், பழம் பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருதிகா. கடந்த 2002-ஆம் ஆண்டு சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதிகா, தொடர்ந்து ஆல்பம், ஜீவா நடித்த தித்திக்குதே, மாதவனுடன் நள தமயந்தி போன்ற தமிழ்ப்படங்களிலும், சுவப்பனம் கொண்டு துலாப்பாரம் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். முதல் படத்தில் எப்படி இருந்தாரோ? அதேப்போன்று தான் 19 ஆண்டுகளுக்குப் பிறகும், அதே அழகுடன் மிளிர்கிறார் நடிகை ஸ்ருதிகா…இதற்கு என்ன காரணம்? முகம் பளப்பளப்புடன் இருப்பதற்கு காரணம் மேக்கப்பா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக தனியார் யூ ட்யூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டிளித்துள்ளார் ஸ்ருதிகா… அதில் என்ன தெரிவித்துள்ளார்? என்பது பற்றி தெரிந்துகொண்டு இனி நாமும் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்க்கலாமா?



பெரும்பாலானவர்கள் வயதாக வயதாக அவர்கள் உடல் பருமன் ஆவதோடு, முகப்பொலிவின்றி காணப்படுவார்கள். இதற்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று முகப்பொலிவை பெற முயல்வார்கள். ஆனால் அதெல்லாம் தேவையில்லை எனவும், நம்முடைய டயட் மூலமாகவே முகப்பொலிவுடன் இருக்க முடியும் என்கிறார் நடிகை ஸ்ருதிகா. மேலும் நான் என்னுடைய வாழ்வில், இதையெல்லாம் தான் அம்மாவின் டார்ச்சரோடு பின்பற்றினேன்…அதன் பலன் தான் இப்பொழுதும் முகம் பொலிவுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.


மேலும் தினமும் சரியான நேரத்தில் உணவு சாப்பிடுகிறோமோ? இல்லையோ? தினமும் சர்க்கரை, சாக்கலேட் பவுடர் எதுவும் இல்லாமல் 2 பெரிய டம்ளரில் பால் குடிப்பதாகத் தெரிவிக்கிறார். இதோடு 2 பாதாம் மற்றும் 2 கப் தயிர் மறக்காமல் சாப்பிடச்சொல்லி என்னுடைய அம்மா வற்புறுத்தியதாகவும் ஸ்ருதிகா கூறுகிறார்.  இது மட்டுமில்லாமல் காய்கறி சூப் சாப்பிட்டேன். கேரட், வெள்ளரி, பீட்ரூட் போன்று 10 நாள்களுக்கு ஒவ்வொரு சூப் என்னுடைய அம்மா குடிக்கச் சொல்வதாகவும், அதனால்தான் மேக்கப் இல்லாவிடிலும் எனது முகம் பளபளப்புடன் இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ஸ்ருதிகா..



இதோடு கொள்ளு மற்றும் சுண்டல் சேர்த்து வேக வைத்து சூப் போன்று என்னுடைய அம்மா கொடுப்பார்கள். மேலும் சோயா, கீரை ஜூஸ்தான் எங்களுடைய டயட் ப்ளான்.. கடந்த 23 ஆண்டுகளாக ஒரு நாள் கூட இதனை என்னுடைய அம்மா நிறுத்தியதில்லை. வெளியூருக்குச் சென்றாலும் அதனை எப்படியாவது நடைமுறைப்படுத்துவதற்கு முயல்வார்கள். இதன் பலன்தான் தற்போதும் முகப்பொலிவை நான் பெற்றிருக்கிறேன் என கூறுகிறார்… மேலும் என் அம்மா என்ன செய்தாரோ? அதைத்தான் நான் என்னுடைய பையனுக்கு தொடர்கிறேன் என்றார்.. ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னுடைய அம்மாவின் டயட் ப்ளானை ஒரு நாளும் பின்பற்றியதே இல்லை எனக் கூறுகிறார் நடிகை ஸ்ருதிகா….