UPI Lite:  யுபிஐ (UPI) பின் நம்பர் இல்லாமல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவையை Gpay அறிமுகம் செய்துள்ளது.


ஆன்லைன் பணப்பரிவர்த்தனை


இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. 


இணையத்தில் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகளில் கூட பண பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


யுபிஐ லைட்


இந்நிலையில், யுபிஐ பின் (UPI Pin) இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்வது குறித்து Gpay புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அது என்னவென்று பார்த்தால் பொதுவாக UPI மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் பணப்பரிவரித்தனை மேற்கொள்ளும் முன் பயணர் அதற்கான 4 அல்லது 6 இலக்க எண்களை உள்ளிட வேண்டும்.


அவசர தேவைக்காக பொதுவெளியில் பணம் செலுத்தும்போது சிலர் Pin நம்பரை கவனிக்கவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கவும், விரைவாக பயனர்கள் பணத்தை பரிவர்த்தனை செய்ய ஏதுவாக UPI Lite அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் சிறு கடைகளில் ரூ.200 வரையில் பின் நம்பர் இல்லாமல் பணத்தை விரைவாக செலுத்த முடியும். இந்த யுபிஐ லைட் மூலம் ஒரே நாளில் ரூ.4,000 வரை பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும், யுபிஐ லைட்டை பயன்படுத்தி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எப்படி தொடங்குவது?



  • முதலில் Gpay செயலிக்குள் நுழைந்து முகப்பு பக்கத்தில் இருக்கும் UPI Lite ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • பின்பு, உங்கள் வங்கி கணக்கு விவரங்களை உள்ளிட்டு, உங்கள் யுபிஐ லைட் வாலட்டில் பணத்தை சேர்க்கவும்.

  • பணம் செலுத்த யுபிஐ லைட் என்ற ஆப்ஷனை  தேர்ந்தெடுத்து நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை உள்ளிட வேண்டும்.

  • பின்னர், Pay என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பணத்தை செலுத்தலாம்.

  • உங்கள் யுபிஐ லைட் வாலட்டில் நீங்கள் சேர்க்கக் கூடிய அதிகபட்சத் தொகை 2000  ரூபாயாகும்.


Paytm மற்றும் PhonePe போன்ற பிற தளங்கள் ஏற்கனவே இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Chandrayaan 3: நாளை விண்ணில் சீறிப்பாயும் சந்திரயான் 3 - தொடங்கியது கவுன்ட்டவுன்: வரலாற்றுச் சாதனை படைக்குமா இஸ்ரோ?